ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

ரூபாய் மதிப்பு உயர்வால் தங்கம் விலை இறங்குமுகம்!

ரூபாயின் மதிப்பு வலுவடைந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக, தில்லியில் இன்றைய தங்கம் விலை தொடர்ந்து 3 வது நாளாகக் குறைந்து, 10 கிராமுக்கு ரூ. 1,800 சரிந்து ரூ. 1.5 லட்சமாக இருந்தது.

தங்கம்

Updated On :

புதுதில்லி: ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக, தலைநகர் தில்லியில் இன்றைய தங்கம் விலை தொடர்ந்து 3 வது நாளாகக் குறைந்து, 10 கிராமுக்கு ரூ. 1,800 சரிந்து ரூ. 1.5 லட்சமாக உள்ளது.

அகில இந்திய சரஃபா சங்கத்தின் தகவலின் அடிப்படையில் 99.9 சதவீதம் சுத்த தங்கத்தின் விலை, நேற்று (செவ்வாய்க்கிழமை) 10 கிராமுக்கு ரூ. 1,52,600 லிருந்து ரூ. 1,800 குறைந்து ரூ. 1,50,800 ஆக உள்ளது.

அதே போல வெள்ளியின் விலை, கிலோ ஒன்றுக்கு நேற்று ரூ. 2.26 லட்சமாக இருந்த நிலையில், இன்று ரூ. 5,000 குறைந்து ரூ. 2.21 லட்சமாக வீழ்ச்சியடைந்தது.

உள்நாட்டு உலோகச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை ரூ. 3,600-க்கும், வெள்ளியின் விலை ரூ. 7,500-க்கும் குறைந்துள்ளது.

குறுகிய கால டாலர் தேவையைக் குறைக்கவும், ஊக அடிப்படையிலான அந்நியச் செலாவணி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஆதரவுடன், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ. 95.17 ஆக நிறைவடைந்தது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு தொடர்ந்து 4வது நாளாக உயர்வைக் கண்டுள்ளது.

Summary

Gold prices fell for the third straight day, shedding Rs 1,800 to Rs 1.5 lakh per 10 grams.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.