ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ. 95.17 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ. 95.17 ஆக நிறைவடைந்தது.

இந்திய ரூபாய்

Updated On :

மும்பை: குறுகிய கால டாலர் தேவையைக் குறைக்கவும், ஊக அடிப்படையிலான அந்நியச் செலாவணி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ. 95.17 ஆக நிறைவடைந்தது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு தொடர்ந்து 4வது நாளாக உயர்வைக் கண்டுள்ளது.

ஊக அடிப்படையிலான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ எடுத்த நடவடிக்கைகளால் இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாத கால உச்சத்தை எட்டியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். டாலரின் பலவீனம் மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் குறைந்ததும் ரூபாயின் மதிப்பு உயர உதவின. இருப்பினும், உள்நாட்டில் பங்குச் சந்தைகளின் மந்தநிலை காரணமாக ரூபாயின் மதிப்பில் பெரிய அளவிலான உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.

அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 95.05 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 94.76 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 95.19 வரை சென்றது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 19 காசுகள் உயர்ந்து, ரூபாயின் மதிப்பு ரூ. 95.17 ஆக பதிவானது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து 3வது நாளாக ரூபாயின் மதிப்பு வலுவடைந்து 42 காசுகள் உயர்வுடன் ரூ. 95.36 ஆக நிறைவடைந்தது.

கடந்த நான்கு நாள் வர்த்தக அமர்வுகளில், டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு மொத்தம் 171 காசுகள் உயர்ந்துள்ளது.

Summary

The rupee appreciated 19 paise to close at 95.17 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.