ரூபாய் மதிப்பு உயர்வு எதிரொலி: தங்கம் விலை வீழ்ச்சி!
ரூபாயின் மதிப்பு உயர்வு கட்டுப்படுத்தியதால், இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலை தலைநகர் தில்லியில் தொடர்ந்து 2 வது நாளாக சரிந்து, 10 கிராமுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1.52 லட்சமாக விற்பனையானது.

தங்கம் விலை
புதுதில்லி: ரூபாயின் மதிப்பு உயர்வு ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தியதால், இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலை தலைநகர் தில்லியில் தொடர்ந்து 2 வது நாளாக சரிந்து, 10 கிராமுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1.52 லட்சமாக விற்பனையானது.
அனைத்திந்திய சரஃபா சங்கத்தின் தகவலின் அடிப்படையில், 99.9 சதவீதத் தூய்மையான தங்கத்தின் விலை, இன்று 10 கிராமுக்கு ரூ. 1,53,000 லிருந்து ரூ. 400 குறைந்து, அனைத்து வரிகளும் உள்பட ரூ. 1,52,600 ஆக குறைந்தது.
அதேபோல், வெள்ளியின் விலை கிலோவுக்கு, முந்தைய நாள் நிலையிலிருந்து ரூ. 500 குறைந்து ரூ. 2,26,000 ஆக விற்பனையானது.
அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கான உடனடித் தேவையை குறைப்பதற்கும், அதிகப்படியான வர்த்தக நிலையை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் அடிப்படையில், ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3வது நாளாக வலுவடைந்தது வருகிறது.
Summary
Gold prices fell for the second straight session, declining Rs 400 to Rs 1.52 lakh per 10 grams in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


