உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் 2வது காலாண்டு விற்பனை 20% அதிகரிப்பு!

பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் 2 வது காலாண்டில் அதன் விற்பனை முன்பதிவு 20% வளர்ச்சியைப் பதிவு செய்ததாக தெரிவித்தது.

பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட்

Published On :

புதுதில்லி: முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், செப்டம்பர் 2026 உடன் முடிவடைந்த 2 வது காலாண்டில், அதன் விற்பனை முன்பதிவு 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், குறிப்பாகப் பெரிய மற்றும் பிரபலமான நிறுவனங்களின் வீடுகளுக்கான தேவை அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றது.

2026-27 நிதியாண்டின் 2 வது காலாண்டில், குடியிருப்புப் பிரிவு வணிகத்தில் ரூ. 7,225 கோடி மதிப்பிலான விற்பனை முன்பதிவுகள் பதிவானதாக தெரிவித்துள்ளது. இதில் மொத்தம் 58.4 லட்சம் சதுர அடி பரப்பளவிலான 3,910 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், நிறுவனம் மொத்தம் 118.8 லட்சம் சதுர அடி பரப்பளவிலான 7,247 வீடுகளை விற்பனை செய்து ரூ. 13,804.3 கோடி மதிப்பிலான விற்பனை முன்பதிவுகளைப் பதிவு செய்துள்ளது.

ஜூன் 2026 நிலவரப்படி, பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் குழுமம் மொத்தம் 2,160 லட்சம் சதுர அடி பரப்பளவிலான 319 திட்டங்களை நிறைவு செய்து ஒப்படைத்துள்ளது. தற்போது 2,290 லட்சம் சதுர அடி பரப்பளவிலான 137 திட்டங்கள் செயல்படுத்தும் நிலையில் உள்ளது.

Summary

Prestige Estates Projects Ltd reported a 20 per cent growth in its sales bookings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.