மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

தங்கம் விலை 15 நாள்களில் ரூ.15,000 குறைவு

தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையானது. கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.

gold rate

தங்கம் விலை - கோப்புப்படம்

Updated On :

தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையானது. கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு டிச. 15-ஆம் தேதி பவுன் ரூ.1,00,120-க்கு விற்பனையானது. அதன் பின்னா், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. நிகழாண்டு ஜன. 1-ஆம் தேதி கிராம் ரூ.12,440-க்கும், பவுன் ரூ.99,520-க்கும் விற்பனையானது. ஜன. 20-ஆம் தேதி அதிகபட்சமாக கிராம் ரூ.16,800-க்கும், பவுன் ரூ.1,34, 400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கும், புதன்கிழமை கிராமுக்கு ரூ.255 குறைந்து, ரூ.12,215-க்கும், பவுன் ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கும், பவுனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 20) கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கும், பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கும் விற்பனையானது. கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வரும் நிலையில், நகைகளாகவும், தங்க நாணயங்களாகவும் தங்களின் தேவைக்கு ஏற்ப மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனா். தொடா் விலை குறைவால் தங்கத்தின் விற்பனை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.175-க்கும், ஒரு கிலோ (கட்டி) வெள்ளி ரூ.5,000 குறைந்து, ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.