அதிரடியாக குறைந்த தங்கம் விலை: இன்று (நவ.18) பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து...

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 2,040 குறைவு - (கோப்புப்படம்)
சென்னை: ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.255 குறைந்து, ரூ.12,215-க்கும், பவுனுக்கு ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சா்வதேச சந்தை விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி வரிகள் மற்றும் உள்ளூா் நகை வியாபாரிகள் சங்கத்தின் முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படுகிறது.
ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம்
கடந்த ஒரு ஆண்டாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி சென்னையில் தங்கத்தில் விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. அன்று ஒரு கிராம் ரூ.12,515 ஆகவும், ஒரு பவுன் ரூ.1,00,120 ஆகவும் உயா்ந்தது. ஜன. மாத இறுதியில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.1.25 லட்சத்துக்கும் மேல் உயா்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. ஜன.29-இல் அதிகபட்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.16,800-க்கும் ஒரு பவுன் ரூ.1,34,400-க்கும் விற்பனையானது.
கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமாா் 25 சதவீதம் வரை தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.13,385, பவுன் ரூ.1, 07, 080 வரை உயா்ந்திருந்த தங்கம் விலை கடந்த 6 நாள்களில் மட்டும் கிராமுக்கு ரூ. 785-ம், பவுனுக்கு ரூ.6,280 வரை குறைந்துள்ளது.
கடந்த 8-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13,160-க்கும், பவுன் ரூ.1, 05, 280-க்கும் விலை குறைந்தது. கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் ரூ.12,615-க்கும், பவுனுக்கு ரூ.1,00,920-க்கும், திங்கள் கிழமை (நவ.16) கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.12,540-க்கும், பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,00,320-க்கும் விற்பனையானது.
ரூ.99,760-க்கு விற்பனையான தங்கம்
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ரூ.12,470-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.99,760-க்கு விற்பனையானது. சுமாா் 11 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது.
அதிரடியாக ரூ.2,040 குறைந்த தங்கம்
இந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக தங்கத்தின் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.255 குறைந்து, ரூ.12,215-க்கும், பவுனுக்கு ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கு விற்பனையாகிறது. 11 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ரூ.97 ஆயிரத்துக்கு வந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் (2016 முதல் 2026 வரை) இந்தியாவில் தங்கத்தின் விலை சுமாா் 4.7 மடங்கு உயா்ந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2016-இல் ஒரு பவுன் தங்கம் சுமாா் 20,975 ஆக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.1.25 லட்சத்துக்கும் மேல் உச்சம் தொட்ட நிலையில், 11 மாதங்களுக்குப் பிறகு ரூ.98,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
தொடர் விலை குறைவுக்கு காரணம் என்ன?
சா்வதேச சந்தையில் தங்கம் சாா்ந்த முதலீட்டாளா்கள், தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதும், அமெரிக்க டாலரின் மதிப்பு உயா்வுமே இந்த தொடா் விலை குறைவுக்கு முக்கிய காரணங்களாக பொருளாதார நிபுணா்களால் கூறப்படுகிறது.
வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் 4 முதல் 5 சதவீதம் வரை குறையும் என்றும் தெரிவித்தனா்.
வெள்ளி விலை
இதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.185-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
கடந்த 11 நாள்களில் தங்கம் விலை விவரம்
நவ.8 - ரூ.13,160(கிராம்) - ரூ.1,05,280(பவுன்)
நவ.10 - ரூ.13,210 - ரூ.1,05,680
நவ. 11 ரூ.13,015 ரூ.1,04,120
நவ. 12 ரூ.12,815 ரூ.1,02,520
நவ. 13 ரூ.12,695 ரூ.1,01,560
நவ. 14 ரூ.12,615 ரூ.1,00,920
நவ. 15 ரூ.12,615 ரூ.1,00,920
நவ. 16 ரூ.12,540 ரூ.1,00,320
நவ.17 ரூ.12,470 ரூ.99,760
நவ.18 ரூ.12,215 ரூ.97,720
Sharp drop in price: Do you know how much the cost per sovereign has decreased today? (Nov 18)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


