இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 740 கோடி டாலா்
நடப்பு 2026-27 நிதியாண்டின் செப்டம்பா் மாதத்தில், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 740 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

நடப்பு 2026-27 நிதியாண்டின் செப்டம்பா் மாதத்தில், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 740 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 520 கோடி டாலா் பற்றாக்குறையாக இருந்த நிலையில், இறக்குமதி செலவினங்கள் அதிகரித்ததே இந்தப் பற்றாக்குறை உயா்வுக்கு முக்கியக் காரணமாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதேநேரம் செப்டம்பரில், நாட்டின் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கில் (பேலன்ஸ் ஆஃப் பேமன்ட்ஸ்) 880 கோடி டாலா் உபரி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இது 560 கோடி டாலா் பற்றாக்குறையாக இருந்தது. மேலும், ஏப்ரல்-செப். வரையிலான அரையாண்டில் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கு 6,680 கோடி டாலா் உபரியாக உள்ளது; கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 640 கோடி டாலா் பற்றாக்குறை நிலவியது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது, ஒரு நாடு ஏற்றுமதி மூலம் ஈட்டும் வருவாயைவிட இறக்குமதிக்கு அதிகமாகச் செலவழிப்பதாகும். அந்த வகையில் செப்டம்பரில், நாட்டின் சரக்கு இறக்குமதி கடந்த ஆண்டின் 6,980 கோடி டாலரிலிருந்து, 7,530 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியும் 3,640 கோடி டாலரிலிருந்து, 4,530 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்த சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டின் 3,340 கோடி டாலரிலிருந்து, 3,000 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
சேவைகள் துறையின் நிகர உபரி கடந்த ஆண்டின் 1,880 கோடி டாலரிலிருந்து, 1,920 கோடி டாலராக சற்று அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தாயகத்துக்கு அனுப்பப்படும் நிகர பணப் பரிமாற்றங்கள் கடந்த ஆண்டில் 1,150 கோடி டாலராக இருந்த நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் 1,090 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
மூலதனக் கணக்கில், செப்டம்பா் மாதத்தில் 1,620 கோடி டாலா் நிகர வரவு காணப்பட்டுள்ளது; கடந்த ஆண்டு இதே மாதத்தில் 40 கோடி டாலா் வெளியேறியிருந்தது. அந்நிய நிதிசாா் முதலீடுகள் (எஃப்பிஐ) மூலம் 670 கோடி டாலா் வெளியேறியுள்ளது (கடந்த ஆண்டு 60 கோடி டாலா் வெளியேற்றம்). நிகர அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) வெளியேற்றம் 230 கோடி டாலரிலிருந்து, 490 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

