

நமக்கு முந்தைய தலைமுறையில் தேவைக்கும் அவசியத்துக்குமாக செருப்புகள் வாங்கிப் பயன்படுத்தினார்கள். அதனால் வீட்டில் ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு ஜோடி செருப்புகளுக்கு மேல் சேமிப்பில் இருக்காது. நமது தலைமுறையில் தேவை அத்யாவசியம் என்பதைத் தாண்டி கொஞ்சம் பகட்டுக்காகவும் செருப்புகள் வாங்கிப் பயன்படுத்தினோம். ஆக சாதாரணப் புழக்கத்துக்கு ஒரு வகை செருப்பு, விஷேசங்களில் கலந்து கொள்ள ஒரு வகை செருப்பு, அலுவலகத்துக்கு ஒரு வகை செருப்பு என்று இரண்டு மூன்று வகைகள்! அது ஒரு காலம்... ஆனால் இன்றைய தலைமுறையினரிடம் ஒருவரின் தனி புழக்கத்துக்கு எத்தனை ஜோடி செருப்புகள் வைத்துக் கொள்கிறார்கள் என்று எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? அப்படிக் கேட்டால் கிடைக்கும் பதிலில் நிச்சயம் மலைத்துப் போவோம்.
ஆம்... ஃபேஷன் மாறிக் கொண்டே இருக்கிறதல்லவா? அதற்கேற்ப நாமும் அப்டேட் ஆக வேண்டாமா! இல்லா விட்டால் அத்தைப்பாட்டி, அம்மாஞ்சி மாமா, பழம் பஞ்சாங்கம், என்றெல்லாம் பட்டம் கட்டுவார்களே நண்பர்கள் வட்டாரத்தில். அதனால் குறைந்த பட்சம் ஐந்தாறு ஜோடி செருப்புகள் ஸ்டாக் இருக்கும். அதோடு உடைகளுக்கு மேட்ச் ஆக வேறு அவ்வப்போது வாங்குவதுண்டு.
சுதா ரகுநாதன் பாடிய ’விசமக்காரக் கண்ணா’ என்றொரு கிளாஸிக்கல் பாடலில் சும்மா ஒரு பேச்சுக்கானும் என்றொரு சொல்லாடல் வரும் அது போல சும்மா ஒரு பேச்சுக்காக இன்றைய நாட்களில் ஒரு தனி நபருக்கான செருப்புகளை வகைப்படுத்த ஆரம்பித்தால்;
இதோ அப்படியான செருப்புகள் சிலவற்றை பாருங்கள்;
ஒரு ரகசியம் தெரியுமா இப்பொதெல்லாம் கோத்ரெஜ் பீரோக்களைக் காட்டிலும் அதிக பணத்தைக் கொட்டி மக்கள் செருப்பு வைக்க கப்போர்டுகள் வாங்கி அவரவர் ஃப்ளாட் முன்பு அலங்காரமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். 7, 8 ஆயிரத்தில் தொடங்கி சிலவற்றின் விலை 25 ஆயிரத்தைத் தாண்டியும் செல்கிறது.
இனி வரும் நாட்களில் புதிதாக உருவாகும் அபார்ட்மெண்டுகளில் கப்போர்டுகள் நிரம்பி வழிந்து செருப்பு வைக்க இடமில்லாமல் புதுவகை கிளர்ச்சிகள் வெடித்து அது சென்னையின் பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக மாறினாலும் ஆச்சர்யமில்லை.
எனினும் ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் பணத்தைக் கொட்டி வாங்கப்படும் செருப்பு கப்போர்டுகளானாலும் சரி, செருப்புகளானாலும் சரி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இல்லா விட்டால் பொலிவு குன்றி சாதாரண விலை மலிவான செருப்புகளைக் காட்டிலும் மட்டமாகி விடும்.
செருப்பு பராமரிப்பு:
விலை அதிகமான பிராண்டெட் செருப்புகளை வாங்கும் போது அந்த செருப்புத் தயாரிப்பாளர்கள் அல்லது வடிவமைப்பாளர்கள் கூறும் பயன்பாட்டு வழிமுறைகளை நிச்சயம் பின்பற்றியே ஆக வேண்டும்.
எல்லா வகைச் செருப்புகளுமே ஈரப்பதத்திற்கு எதிரிகள் தான் ஆதலால் செருப்புகளை அணிந்து கொண்டு அதிக நேரம் ஈரப்பதமான இடங்களில் இருப்பது செருப்புகளின் ஆயுளுக்கு கேடு.
செருப்புகளைப் பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அவற்றை முறையாகச் சுத்தம் செய்து வெளிச்சமும் காற்றோட்டமுமான இடங்களில் உலர வைத்து பின் கப் போர்டுகளில் அடுக்கலாம்.
குழந்தைகளின் செருப்புகள் மற்றும் ஷூக்களை வாரம் ஒருமுறை மைல்ட் டிடர்ஜெண்ட் அல்லது ஷாம்பூவால் சுத்தம் செய்து உலர வைத்து எடுத்து வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.