செப் 18 இரவில் லாஸ் ஏஞ்செல்ஸில் 'எம்மி அவார்ட்ஸ் 2016' விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழா மேடையில் வெள்ளுடை தேவதைகள் ராஜாங்கம். வெள்ளை தேவதைகள் ஒவ்வொன்றாய் அழகு காட்டி நகர்ந்து செல்ல அடுத்து வந்தவர் நம்ம ஊர் சிவப்பழகி பிரியங்காசோப்ரா, 'குவாண்டிகோ நாயகியான' பிரியங்கா சிவப்பு நிற ஜேஸன் வு வெல்வெட் கவுனில் சிறகு முளைத்த செந்நிற தேவதை போல சிவப்புகார்ப்பெட்டில் அப்படியும் இப்படியாய் தனது கவுனை விசிறிக் கொண்டு ராம்ப்பில் நடக்கையில் விழாவில் கலந்து கொண்ட அனைவரது கண்களையும் ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்துச் சென்றார்.
இந்த சிவப்பு நிற ஜேஸன் வு கவுன் வடிவமைப்பு பிரியங்காவுக்காகவே உருவாக்கப்பட்டது போல அத்தனை பாந்தம். அலட்டலான ஆபரணங்கள் எதுவும் அணியாமல் காதுகளில் சிறு வைரத் தொங்கல்கள் மின்ன நேர்த்தியாக வாரி ஹேர் பேண்டில் அடைக்கப்பட்ட போனி டெயிலுடன் பிரியங்கா அன்று எம்மி விருது விழாவின் மைய நட்சத்திரமாக ஜொலித்தார் என்றால் மிகையில்லை. விழாவில் மிக நேர்த்தியாக உடையணிந்து வந்தமைக்காக “சிறந்த ஆடை அணிந்தவர்’ விருது பிரியங்காவுக்கு வழங்கப் பட்டது. ஹாலிவுட்டில் திறமைசாலிகள் மதிக்கப்படுவார்கள், திறமைசாலிகளின் நிலம் ஹாலிவுட் என்ற வார்த்தைகள் நிரூபணம் ஆனதில் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


