பார்லர் போகாமலே ரோஸி லிப்ஸ் வேணுமா? இந்தாங்க படிங்க நேச்சுரல் பியூட்டி டிப்ஸ்!

1/4 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது தேனில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து உதட்டில் தடவி 10 நிமிடங்களுக்கு மென்மையாக  மசாஜ் செய்யவும். இந்தக் கலவை உதட்டின் மேல்புறம் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதில்
பார்லர் போகாமலே ரோஸி லிப்ஸ் வேணுமா? இந்தாங்க படிங்க நேச்சுரல் பியூட்டி டிப்ஸ்!

“ஜோஸி நீ சிகரெட் பிடிக்க கத்துண்டியா என்ன?”

“என்னக்கா நீ திடீர்னு இப்டி கேக்கற? என்னப் பார்த்தா சிகரெட்லாம் பிடிக்கறவ மாதிரியா தோணுது?”

“இல்லடீ, கோச்சுக்காத. உன் லிப்ஸ் பார்த்தா அப்படி கேட்கத் தோணுது. ஏன் இத்தனை டார்க்கா வச்சிருக்க?”

“நானா? இல்லையே... ஜோஸி ஓடிப்போய் கண்ணாடி பார்த்தாள்.”

அக்கா சொன்னது சரி தான். உதடுகள் அதன் இயல்பான நிறத்தை இழந்து கருத்து, வறண்டு போய் வெடிப்புகளுடன் காட்சியளித்தது. ஜோஸிக்கு கவலையாக இருந்தது. ஆனால் பார்லருக்குப் போகவெல்லாம் அவளுக்கு நேரமே இல்லையே! அதனால் ஆளுயரக் கண்ணாடியிலிருந்து சலிப்புடன் முகம் திருப்பி; 

“டார்க்கா தான் இருக்கு, என்ன பண்ணச் சொல்ற? நாள் முழுக்க அதலெடிக்ஸ் பிராக்டிஸ் பண்றேன். மீதி நேரம் செமஸ்டர் எக்ஸாமுக்கு. நடுவுல அப்பப்போ ஹெல்தியா சாப்பிடனும். அதோட  எக்ஸர்சைஸ் வேற எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது. ஸோ... லிப்ஸ் தான அப்பப்போ வாஸலின் தடவினா போதும்னு விட்டுட்டேன்க்கா...”

அக்கா ஜோஸியின் காதைப் பிடித்து வலிக்கும்படி திருகிக் கொண்டே;

“ஏண்டீ லிப்ஸ் தானன்னு விட்டேத்தியா சொல்ற. பெண்களோட உதடுகளைப் பத்தி பாடாத கவிஞன் உண்டோ! ஆண்டவனுக்கே கொவ்வை செவ்வாய்ன்னும், செம்பவள இதழ்கள்ன்னும் வர்ணிக்கற அளவுக்கு அழகுக்கு முக்கியத்துவம் தருகிற கூட்டம் நாம. இங்க வா.. ரொம்பலாம் ஒண்ணும் சிரமப் பட்டுக்க வேணாம். சிம்ப்பிளா ரெண்டு மூணு டிப்ஸ் சொல்றேன். நீ போற போக்குல செய்து முடிச்சுடலாம். நோ டைம் வேஸ்ட்.”

“வேணாம்னா விடவா போற... சொல்லு கேட்டுத் தொலைக்கிறேன்.”

“கேட்டுத் தொலைச்சிடாத... செஞ்சு தொலைச்சிடு” 

அக்கா சிரிப்புடன் ஜோஸியின் தலையில் குட்டி விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

உதடுகள் நிறமிழக்காமல் இருக்கவும், வறண்டு வெடிப்புகளுடன் இல்லாமல் பராமரிக்கவும் நீங்களும் இந்த டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதோ அந்த பியூட்டி டிப்ஸ்;

நேச்சுரல் லிப் பாம்:

தேவையான பொருட்கள்:

தேன் மெழுகு: 1 துண்டு

தேன்: 1/4 டீஸ்பூன்

பாதாம் எண்ணெய்: 1/2 டீஸ்பூன்

செய்முறை: தேன்மெழுகில் தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை ஒரு சின்ன பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது ஒரு சின்ன காட்டன் துண்டில் ஒற்றி எடுத்து உதடுகளில் தேய்த்து வந்தால் இந்தக் கலவை உதடுகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கும். இது மிகச் சிறந்த நேச்சுரல் லிப் பாம் ஆகச் செயல்படும். 

நேச்சுரல் லிப்ஸ் ஸ்கிரப்பர்:

உதடுகள் வறண்டு போய் வெடுப்புகளுடன் தோற்றமளிக்க மற்றுமொரு காரணம், உதடுகளின் மேலுள்ள நீக்கப் படாத செல்களும் தான். இந்த இறந்த செல்களை அகற்ற நேச்சுரல் லிப் ஸ்கிரப்பரை நாமே வீட்டில் தயாரிக்கலாம். எப்படி என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

பாதாம் எண்ணெய் அல்லது தேன்: 1/4 டீஸ்பூன் 
சர்க்கரை: 1/2 டீஸ்பூன்

செய்முறை: 1/4 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது தேனில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து உதட்டில் தடவி 10 நிமிடங்களுக்கு மென்மையாக  மசாஜ் செய்யவும். இந்தக் கலவை உதட்டின் மேல்புறம் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதை நாம் உணரலாம்.

இரண்டு டிப்ஸுமே ரொம்ப, ரொம்ப ஈஸி தான். செய்து பாருங்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com