வீட்டிலிருந்தே மேக்அப் செய்துகொள்வது எப்படி?

தற்போதைய நவீன உலகத்தில் பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்த அழகு நிலையங்களையே அதிகம் சார்ந்திருக்கின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தற்போதைய நவீன உலகத்தில் பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்த அழகு நிலையங்களையே அதிகம் சார்ந்திருக்கின்றனர். 

கரோனா பேரிடர் காலத்தில் அழகு நிலையங்கள் அனைத்தும் மூடியிருப்பது பெண்களுக்கு கடினமான சூழ்நிலைதான். மாதம் தவறாமல் அழகு நிலையங்களுக்குச் செல்வோர் ஏராளம். அதிலும் பிறந்தநாள், திருமண நாள் என்று முக்கிய தினங்களில் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுக்கலை நிபுணர்களின் உதவியுடன் தங்களை அழகுபடுத்திக்கொள்வது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. 

இந்நிலையில் முக்கிய தினங்களில் வீட்டிலிருந்து உங்களை நீங்களே அழகுபடுத்திக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம். 

1. எளிமையான மேக்அப் 

நீங்கள் வீட்டில் இருந்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன்தான் முக்கிய தினங்களை கொண்டாடப்போகிறீர்கள் என்பதால் முழுமையான மேக்அப் தேவையில்லை. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைத்து முகத்தை பிரகாசிக்க வைக்க லேசான மேக்அப் போதும். 

2. பீச் ப்ளஷ் ஷேட்ஸ்

முகத்தை வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள பீச் ப்ளஷ் ஷேட்ஸ்-யை பயன்படுத்துங்கள். இதில் பல வித்தியாசமான நிறங்கள் உள்ளன. உங்கள் முக நிறத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து பயன்படுத்துங்கள். குறிப்பாக கன்னங்கள், மூக்கு முழுவதும் ப்ளஷைப் பயன்படுத்தலாம்.

3. ஹைலைட்டர்

இப்போது உங்கள் அழகை மேலும் கூட்ட அதி-பிரகாசமான ஒரு கோல்டன் ஹைலைட்டரை பயன்படுத்தலாம். ரோஸ் கோல்டு, ஷாம்பெயின், மந்தமான கோல்டு ஹைலைட்டரை தேர்வு செய்து முகத்தில் கருமையாக உள்ள இடங்களில் பயன்படுத்தலாம். மேலும் கன்னத்தின் விளிம்புகளில் மூக்கின் நுனியில், மூக்கின் கீழே பயன்படுத்தவும். 

4. லிப்ஸ்டிக்

பெரும்பாலாக அனைத்து பெண்களுக்கும் பிடித்தமான ஒன்று லிப்ஸ்டிக்​. முகத்தில் மேக்கப் இல்லை என்றாலும் லிப்ஸ்டிக் மட்டும் போட்டிருந்தால்கூட உங்களை அழகாக காட்டும். 

இதனால் உங்கள் முகத்திற்கு ஏற்றவாறு லிப்ஸ்டிக் தேர்வு செய்து போட்டுக்கொள்ளலாம். மேக்கப் போட்டால், டார்க் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது நல்லது. மெஜந்தா, நல்ல சிவப்பு அல்லது டார்க் ரோஸ் நிறத்தை தேர்வு செய்யலாம். 

5. ஐலைனர்

கண்கள் அழகாக இருக்கும்போது முகமும் அழகாக இருக்கும். அந்தக்காலத்தில் இருந்து பெண்கள் கண்மை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஐலைனர் கண்களை அழகுபடுத்துவதுடன் முகத்திற்கும் அழகு சேர்க்கிறது. பல்வேறு வண்ணங்களில் ஐலைனர் வருகிறது. 

ஆனால் கருப்பு அல்லது பழுப்பு நிறங்களில் மட்டும் போட்ட காலம் சென்றுவிட்டது. இன்று பலரும் பச்சை, நீலம், இளஞ்சிவப்பு போன்ற நிறங்களை பயன்படுத்துகின்றனர். எனவே இதுமாதிரியான வித்தியாசமான ஐலைனர்களைப் பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com