பாதங்களுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்!

பாதங்களின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது. பாதங்களை மசாஜ் செய்வதன் மூலமாக உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குகின்றன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உடல் முழுவதையும் தாங்கும் பாதங்களைப் பராமரிப்பது ஒட்டுமொத்த உடலையும் பராமரிப்பதற்குச் சமம். 

பாதங்களின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது. பாதங்களை மசாஜ் செய்வதன் மூலமாக உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குகின்றன. 

அதிலும், குறிப்பாக பாதங்களில் தேங்காய் எண்ணெய்யை தடவுவதன் மூலமாக நல்ல பலன்கள் கிடைக்கின்றன. பாதங்களில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் உடல் முழுவதும் புத்துணர்ச்சி பெறுகிறது, உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. 

இரவில் நன்றாக தூக்கம் வரவேண்டுமென்றால் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து பாதங்களில் தடவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். நல்ல தூக்கம் கிடைக்கும். அதிலும் நன்றாக மசாஜ் செய்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். 

மேலும் உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. குழந்தைகளுக்கும் இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்தால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். 

இரவில், படுக்கைக்குச் செல்வதற்கு முன், கால்களை சுத்தமாக கழுவிவிட்டு நல்ல துணி கொண்டு துடைத்த பின்னர் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். 

பொதுவாகவே கால்களின் வழியாக கிருமிகள் உடலுக்குள் நுழையும் என்பதால் தேங்காய் எண்ணெய் இதைத் தடுக்க உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com