மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மின்சார வாரிய கட்டுப்பாட்டு மையத்தை 94987 94987 | 1912 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?

நாம் நம்மை எப்படி இருக்கிறோம் என்று கருதுகிறோமோ, நமது உடலமைப்பைப் பற்றிய நமது எண்ணம் எவ்வாறு உள்ளது என்பதுவும் மிகவும் முக்கியம்.

News image

வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?

Updated On :27 ஜனவரி 2022, 4:23 pm IST


புது தில்லி: நாம் நம்மை எப்படி இருக்கிறோம் என்று கருதுகிறோமோ, நமது உடலமைப்பைப் பற்றிய நமது எண்ணம் எவ்வாறு உள்ளது என்பதுவும் மிகவும் முக்கியம்.

எப்போதுமே, நமது உடலமைப்பைப் பற்றி நமக்கு ஒரு எண்ணம் இருக்கும். அது நமது உடலின் எடை, அமைப்பு, வடிவம் போன்றவற்றின் அடிப்படையிலானது. ஆனால், எப்போதுமே ஒருவர் அவரது உடலமைப்பைப் பற்றி நேர்மறையான சிந்தனையைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம் என்கறிர்கள். அது நமது வாழ்முறையை மட்டுமல்ல, நமது நன்னடத்தைக்கும் காரணமாக அமையுமாம்.

சில சிறார்கள், பள்ளியிலோ குடும்ப உறுப்பினர்களாலோ உருவக் கேலிக்கு ஆளாகியிருப்பார்கள். இதனால், அவர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது ஒரு வெறுப்பு உருவாகும். இதனால், ஒரு நபரின் மன நலன் மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்டு, அது மீண்டும் அவர்களது உடலமைப்பின்மீதே எதிரொலிக்கும். சிலருக்கு இதனால் மன அழுத்தம், உணவருந்துவதில் சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்பட வழிகோலும்.

அது மட்டுமல்ல, ஒருவர் தன் உடலமைப்பின் மீது கொண்டிருக்கும் தாழ்வுமனப்பான்மை காரணமாக, அடிக்கடி மனநிலை மாற்றம், சமுதாயத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுதல், நட்பு பாராட்டாமை போன்றவை ஏற்படும். இதனை கண்டுகொள்ளாமல் விடும்போது, மற்றவர்களை புறக்கணிப்பது, தங்களது உடலமைப்பை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மாற்ற தவறான வழிகளைக் கடைப்பிடிப்பது அவ்வளவு ஏன் தங்களையே துன்புறுத்திக் கொள்ளும் நிலைக்கும் ஆள்படலாம்.

எனவே, பெற்றோரோ.. உங்கள் வீட்டிலிருக்கும் சிறார்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்களை வெளியே கொண்டு வர வேண்டியது உங்கள் கடமைதான்.

அதற்கு சில வழிகள்..
உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மனம்விட்டுப் பேச அனுமதியுங்கள். எதைச் சொன்னாலும் அதற்கு ஆலோசனை வழங்குகிறேன் என்று களத்தில் குதிக்க வேண்டாம். அவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள். இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று சிந்தித்துப் பேசாமல், நினைத்ததை சொல்வதற்கு உங்களிடம் அவர்களுக்கு இடம்கொடுங்கள்.

ஒரு சில ஆடைகளை அவர்கள் அணியும் போது, அது நன்றாக இல்லை என்று நேரடியாகக் கூறாமல், மிகச் சிறந்த ஆடை அவர்களுக்கு எந்த அளவுக்கு தோற்றப் பொலிவைக் கொடுக்கிறது என்று எடுத்துச் சொல்லுங்கள். 

எந்த ஆடையை அணியும் போது அவர்களது நண்பர்கள் அதிகம் கேலி செய்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்களது ஆடை அலங்காரத்தை மாற்ற உதவலாம்.

என் மகள்/மகன் குள்ளமாக இருக்கிறார், ஒல்லியாக இருக்கிறார் என்றெல்லாம் மற்றவர்களிடம் கூறாதீர்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா, நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறார்களா என்பதைப் பற்றி கூறுங்கள்.

உங்களுக்கு ஒன்று மிகச் சரியானதாகத் தோன்றும், ஆனால், அதுவே உங்கள் பிள்ளைகளுக்கும் சரியாக இருக்கும் என்று நினைக்கக் கூடாது, அவர்கள் அதற்கு நேர்மாறாக நினைக்கவும் வழி இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

உடலமைப்பு எப்படியிருந்தாலும், உங்கள் பிள்ளைகள் சரியாக உடற்பயிற்சி செய்வதை சத்தான உணவு போன்றவற்றை உறுதி செய்யுங்கள். அதில் சமரசம் வேண்டாம் என்பதை அவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை உருவக்கேலி செய்யக் கூடாது. மற்ற நண்பர்களோடு ஒப்பிடக் கூடாது. இந்த ஆடை உனக்கு நன்றாக இல்லை என்று சொல்லக் கூடாது. இதெல்லாம் சாதாரண விஷயம்தானே என்று நினைக்கலாம். ஆனால், ஏற்கனவே உடலமைப்பு குறித்து தாழ்வுமனப்பான்மையில் இருப்பவர்களுக்கு இது பெரும் துன்புறுத்தலாக அமையலாம் எச்சரிக்கை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.