ட்ரெண்டி ஜாக்கெட் ஸ்லீவ்ஸ் டிசைன்ஸ்!

ஜாக்கெட்டில் லேட்டஸ்ட் ஸ்லீவ்ஸ் டிசைன்கள் என்னென்ன ட்ரெண்டியாகப் பலராலும் பின்பற்றப்படுகின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்...
ட்ரெண்டி ஜாக்கெட் ஸ்லீவ்ஸ் டிசைன்ஸ்!

இந்த உலகம் நினைப்பது போல பெண்களின் ஆகச்சிறந்த பிரச்னை ஆண்கள் அல்ல, வருடம் முழுக்க ஒன்று மாற்றி ஒன்றாய் வந்து கொண்டேயிருக்கும் ஒவ்வொரு விசேஷ நாளுக்காகவும் பார்த்துப் பார்த்து வாங்கக் கூடிய  ஒவ்வொரு புடவைக்கும் பொருத்தமாக பிளவுஸ்கள் தைத்து முடிப்பது தான் அவர்களின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இன்றைய தேதிக்கு ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் வார்ட்ரோபை ஆராய்ந்தாலும் கூட குறைந்த பட்சம் 50 புடவைகளாவது வைத்திருப்பார்கள். தினமும் அலுவலகத்துக்கு புடவை மட்டுமே உடுத்திச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களிடம் எத்தனை புடவைகள் இருக்கின்றன என்ற கணக்கு அவர்களுக்கே தெரியுமோ, தெரியாதோ?! புடவை என்றால் வெறும் புடவை மட்டும் இல்லையே? அதற்குத் தோதாக பிளவ்ஸ் அமைந்தால் மட்டும் தான் புடவை சோபிக்கும். சுரிதார்களைப் போல புடவையில் மிக்ஸ் அன்ட் மேட்ச் செய்வது அத்தனை எளிதில்லை. எனவே, கடை, கடையாக ஏறி இறங்கியாவது ஒரு பெர்ஃபெக்ட் டெய்லரைக் கண்டடைவதை தங்களது வாழ்நாள் லட்சியமாகவே வைத்திருக்கிறார்கள் அனேகம் பெண்கள். பொருத்தமான ஜாக்கெட்டுகள் கூட பெரும்பாலும் கிடைத்து விடுகின்றன. ஆனால், அதைக் கச்சிதமாக தைத்துத் தரக்கூடிய டெய்லர்கள் தான் பலருக்கும் கிடைக்க மாட்டேனென்கிறார்கள். பெண்களின் வாழ்வில் இந்தத் தேடல், பெருந்தேடலாகி விடுவதோடு மட்டுமல்ல, தீராத ஏக்கமாகவும் ஆகி விடுகிறது.

நல்ல டெய்லர் அமையவில்லை,  எந்த ஜாக்கெட்டை எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு சின்னப் பிழை, மூச்சுக் கூட விட முடியாமல் இறுக்கித் தைத்து விடுகிறார்கள், அல்லது பாட்டி மாதிரி தொள, தொளப்பாய் தைத்து வைக்கிறார்கள். என்பதற்காக பெண்கள் புதுப் புது ஃபேஷனில் ஜாக்கெட் தைத்துக் கொள்ளாமல் இருந்து விட முடியுமா? சில வாரங்களுக்கு முன்னால் ஜாக்கெட்டின் நெக் டிசைன்களைப் பற்றி லைஃப்ஸ்டைல் ஃபேஷனில் ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது. அதையொட்டி தற்போது  ஜாக்கெட்டில் லேட்டஸ்ட் ஸ்லீவ்ஸ் டிசைன்கள் என்னென்ன ட்ரெண்டியாகப் பலராலும் பின்பற்றப்படுகின்றன என்று இந்தப் புகைப்படங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த டிசைன்களை எந்தெந்தப் புடவைகளுக்குப் பொருத்தமாகத் தைத்துப் போட்டுக்கொள்ளலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். 

பஃபி ஸ்லீவ்ஸ்


ப்ளீட்டட் ஸ்லீவ்ஸ்


டர்ட்டில் நெக் பிளவ்ஸ்


ஃபிஷ் கட் எண்ட் ஸ்லீவ்

ஃபுல் ஸ்லீவ்ஸ்


கேப் ஸ்லீவ்ஸ்


குவார்ட்டர் ஸ்லீவ்ஸ்


ஸ்பாகெட்டி ஸ்ட்ராப் ஸ்லீவ்ஸ்


ஸ்லீவ்லெஸ்


பெல் ஸ்லீவ்ஸ்

பெப்லம் ஸ்லீவ்ஸ்

விங்ஸ் ஸ்லீவ்ஸ்

காலர் நெக் ஸ்லீவ்ஸ்

சுஷ்மா ஸ்வராஜ் ஸ்டைல் ஸ்லீவ்ஸ்

ஹாஃப் ஸ்லீவ்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com