அடேங்கப்பா கண்டுபிடிப்பு! பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகையொன்று!

அந்நாளில் எகிப்து மற்றும் கிரேக்கப் பெண்களுக்கு உலோகத்தில் பட்டை தீட்டப்பட்ட நகங்களை அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. அதை அவர்கள் நெயில் நகை என்ற கண்ணோட்டத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் அப்போதிருந்
அடேங்கப்பா கண்டுபிடிப்பு! பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகையொன்று!
Published on
Updated on
2 min read

நெயில் ஆர்ட் தெரியும்... ஆனால் இது அதை விட அட்வான்ஸ் முயற்சி போல!; இதில் பின்பற்றப்பட்டிருக்கும் கலையுணர்வு நெயில் ஆர்ட்டிலிருந்து நெயில் ஜூவல்லரிக்கு முன்னேறியிருக்கிறது பெண்களின் ரசனை. இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் எல்லாப் பெண்களுக்குமே இதைப் போன்ற அழகான நெயில் நகைகளை வாங்கி அணிந்து கொள்ள ஆர்வம் வரத்தானே செய்யும். பார்க்கப் பார்க்கக் கொள்ளை அழகு. ஆனால் இது இன்றைக்கு புதிதாக கண்டுபிடிப்பென்று கூறி விட முடியாது.

அந்நாளில் எகிப்து மற்றும் கிரேக்கப் பெண்களுக்கு உலோகத்தில் பட்டை தீட்டப்பட்ட நகங்களை அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. அதை அவர்கள் நெயில் நகை என்ற கண்ணோட்டத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் அப்போதிருந்தே நகங்களைச் சோடிக்கும் வழக்கம் பெண்களிடையே இருந்திருக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் பல உள்ளன. அது மட்டுமல்ல, சத்ரபதி சிவாஜி தன்னை உறவாடிக் கொல்ல உத்தேசித்த எதிரியான அப்சல்கானைக் கூட தனது நகங்களில் மாட்டிக் கொண்ட புலி நகங்களால் தான் கொலை செய்தார் என்பது வரலாறு. ஆகவே ஆபரணமாக அல்லாது உலோகங்களால் போலி நகங்களைச் செய்து மாட்டிக் கொள்வது தொன்று தொட்டே இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பில் இருந்த பிற தேசங்களிலும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆகவே ஆண்கள் யாரும் இதென்னடா நமது பர்சுக்கு வந்த புதுச் சோதனை என பீதியாக வேண்டாம்.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்து பின் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது அசெளகரியத்தால் மறைந்து போயிருந்த பழக்கமொன்று இப்போது புனர்ஜென்மமெடுத்திருக்கிறது அவ்வளவு தான்.

பெண்கள் அணிந்து கொள்ள கிடைத்த புதிய நகையென்று இதைச் சொன்னாலும் கூட இதை அணிந்து கொள்வதில் இருக்கும் அசெளகரியத்தையும் பெண்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட உலோகங்களில் வைரக் கற்களைப் பதித்து இவ்வகை நெயில் ஆபரணங்களைச் செய்தால் பார்க்க அழகாக இருக்கும். அணிந்து கொள்ளும் போது கம்பீர உணர்வையும் தரும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com