பெட்டிகோட்களுக்கு முடிவு கட்டுங்கள், சேலைக்கு பெல்ட் போதும்... புது ஃபேஷன் புரட்சி!

பெட்டிகோட்களுக்கு முடிவு கட்டுங்கள், சேலைக்கு பெல்ட் போதும்... புது ஃபேஷன் புரட்சி!

பிளெயின் புடவைகளுக்கு மேட்ச் ஆக ஹெவியாக எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட்டுகளையும், விக்டோரியன் ஹை காலர் வைத்த நீண்ட ஸ்லீவ்கள் கொண்ட ஜாக்கெட்டுகளையும் பயன்படுத்தலாம். அது தரும் ரிச் லுக் அலாதியானது.

ஆறு கெஜப் புடவைகளை ஒரே மாதிரியாக 8 ஃப்ளீட்ஸ் வைத்து இடுப்பில் சொருகியும், 6 ஃப்ளீட்ஸ் மடிப்பு வைத்து மேலாக்காக மடித்துப் போட்டுக் கொள்வதையும் தவிர்த்தால் புடவையை வைத்து வேறு எந்த விதமான ஃபேஷனையும் உருவாக்க முடியாது. மிஞ்சிப் போனால் வட இந்திய பாணியில் மேலாக்கை பின்புறமாகப் படர விடாமல் முன்புறமாக விசிறிப் போட்டுக் கொள்வது ஒரு பெரிய ஃபேஷன் மாற்றம் என்று ஒப்புக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் திருமண வரவேற்புகளில் மட்டும் இப்படி கலாச்சாரப் மாற்றம் நடக்கும். மற்றபடி புடவை என்றால் மேலே சொன்னபடி தான் உடுத்துவது என்பது மரபு.

அதை உடைத்து, ஒரு மாற்றத்துக்காக, புடவைகளை வேறு, வேறு விதமாக உடுத்திப் பழகினால் என்ன? என்கிறார்கள் ஃபேஷன் டிஸைனர்கள். அவர்கள் சொல்வதிலும் தவறில்லையே! ஆறு கெஜம் புடவைகளை எப்படியெல்லாம் மாற்றி, மாற்றி ஸ்டைலாக உடுத்தலாம் எனச் சொல்கிறார்கள் வூனிக் நிறுவனத்தின் சீப் ஸ்டைலிஸ்ட் பவ்யா சாவ்லாவும், ஸ்டைல்டேக்.காமின் நிறுவனர் மற்றும் இயக்குனரான யசோதரா ஷெரிப்பும்;

  • பாரம்பரியமாக புடவைக்கு மேட்ச் ஆக இடுப்பைக் காட்டும் பிளவுஸ் அணியும் வழக்கத்தை தூக்கிக் கடாசி விட்டு, சிக்கென்று உடலுக்குப் பாந்தமாய் கிரப் டாப் ஜாக்கெட் வகையறாக்களைப் பயன்படுத்தலாம். இவற்றை வயிற்றுப் பகுதியை மறைக்கும் விதமாகவும் வடிவமைக்கலாம். புடவை இடுப்பில் நழுவாமல் நிற்கச் செய்ய பெட்டிகோட் அணிவார்கள். அந்த வழக்கத்தையும் இனி உதறி விட்டு, சேலைக்குப் பொருத்தமாக கிரப் டாப் அணிந்து, அதற்குப் பொருத்தமாக பெட்டிகோட்டுகளுக்குப் பதிலாக பெல்ட்டுகளை தேர்ந்தெடுத்து உடுத்தலாம். பார்க்க புது ஃபேஷனாக இருப்பதோடு அணிந்து கொண்டு நடமாடவும் எளிதாக இருக்கும். கிரப் டாப் தேர்ந்தெடுக்கும் போது, டாட்டட் பிரிண்ட்டுகள், மோனோகுரோம் பிரிண்டுகள் உள்ளவற்றுக்கு முன்னுரிமை தரலாம். மேலும் இந்த முறையில் புடவைகளை அணிய கிரப் டாப்புகள் தவிர பெப்லம் வகை டாப்ஸ்களையும் பயன்படுத்தலாம். புதுமையாக இருக்கும்.
  • அது மட்டுமல்ல சுஷ்மா ஸ்வராஜ் கோட் அணியும் ஸ்டைலில், புடவைகளுக்கு மேட்ச் ஆக ஜாக்கெட்டுகள் அல்லது ஃபீமேல் ஷர்ட்டுகள் அணியலாம். அந்த ஜாக்கெட்டுகளுக்கு வெல்வெட், டெனிம், அல்லது எம்பிராய்டரி செய்யப்பட்ட காலர்களை புடவைகளுக்கு மேட்ச் ஆக டிஸைன் செய்து உடுத்தலாம். உடலை முழுதாக கவர் செய்யும் ஜாக்கெட்டுகள் மற்றும் முழுதாக பிரிண்ட் வொர்க் செய்யப்பட்ட ஷர்ட்டுகளை புடவைகளுக்கு மேட்ச் ஆக அணிந்தால் அது புது டிரெண்டாக இருக்கும். உதாரணமாக பிளெயின் புடவைகளுக்கு மேட்ச் ஆக ஹெவியாக எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட்டுகளையும், விக்டோரியன் ஹை காலர் வைத்த நீண்ட ஸ்லீவ்கள் கொண்ட ஜாக்கெட்டுகளையும் பயன்படுத்தலாம். அது தரும் ரிச் லுக் அலாதியானது. 
  • புடவைகளுக்கு பெல்ட் அணியும் ஸ்டைல்: புடவைகளுக்கு பொருத்தமாக பெல்ட் தேர்ந்தெடுத்து அணிந்தால் அது தரும் கிளாஸி லுக் அபாரமாக இருக்கும். மெல்லிய உலோக பெல்ட்டுகள், லெதர் பெல்ட்டுகள், துணி பெல்ட்டுகள் என எந்த மெட்டீரியலைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் பெல்ட் அணியலாம். முக்கியமாகப் பின்பற்ற வேண்டிய விசயம், பெல்ட் உங்களது இடுப்புக்கு சற்றே மேலிருக்க வேண்டும். இந்தன் முக்கியமான பயன் என்னவெனில், முன்புற பிளீட்ஸ்களை நகராமல் மடிப்பு கலையாமல் பாதுகாத்து கச்சிதமான உடலமைப்பை அழகாக வெளிப்படுத்தும். அதோடு பள்ளு டிஸனையும் அழகாக விசிறி போல உடுத்த உதவும்.
  • பெட்டிகோட் அணியும் வழக்கத்தை குழி தோண்டி புதைத்து விட்டு உங்கள் புடவைகளுக்கு மேட்ச் ஆக பலாஸோக்கள், தோத்திகள் மற்றும் ஜீன்ஸ்களைப் பயன்படுத்தலாம். புடவைகளை இவற்றோடு மிக்ஸ் செய்து அணியும் போது அவை தரும் தோற்றம் நிச்சயம் வேறு விதமாக இருக்கும்.
  • வழக்கமாக உடுத்தும் காஞ்சிபுரம் மற்றும் ஜார்ஜெட் புடவைகளை விட்டு விட்டு ஒரு மாற்றத்துக்கு டெனிம் அல்லது ஜீன்ஸ் துணியாலான புடவைகளை முயற்சிக்கலாம். டெனிம், ஜீன்ஸ் மட்டுமல்ல எண்ணிலடங்கா வகையில் குவிந்துள்ள வேறு வகையான ஃபேப்ரிக்குகளையும் புடவைகளாக டிஸைன் செய்து வித்யாசமாக உடுத்தி புது ஸ்டைல் கிரியேட் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com