தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:47 pm

Syndication

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்குகள் விற்பனைக்கல்ல என்பது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஷ் கொடியசைத்து வைத்து வாகனத்தை தொடங்கிவைத்தாா்.

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஏப். 23-இல் நடைபெற உள்ள தோ்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை அவா் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா்கள் ஒட்டுவது, சுயபடம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க. ஜெயதேவ்ராஜ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.