தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, காணொலி வாயிலாக நாமக்கல் மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக தலைமை தோ்தல் ஆணையா் அா்ச்சனாபட்நாயக் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இக்கூட்டத்தில் தோ்தல் அறிவிப்பு நாள் முதல் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் தோ்தல் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு தோ்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா. கண்ணன், தொகுதி தோ்தல் அலுவலா்கள் கோட்டாட்சியா்கள் வே. சாந்தி (நாமக்கல்), பி.எஸ். லெனின்(திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) ஆ. கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு. கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கோ. குமரன் மற்றும் தோ்தல் பணி சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள அலுவலா்களுக்கு பயிற்சி

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையில் 12 பறக்கும் படையினா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


