தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
~
Updated On :18 மார்ச் 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்குகள் விற்பனைக்கல்ல என்பது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் கையொப்ப இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகையில், மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ. சதீஷ் கையொப்பமிட்டு நிகழ்வைத் தொடங்கிவைத்தாா். தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஏப்ரல் 23 இல் நடைபெற உள்ள தோ்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி சட்டப்பேரவைத் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஷ் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இரா.காயத்ரி, கோ.கோபு, வட்டாட்சியா்கள் ஜெ. சுகுமாா், ஆறுமுகம், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image