மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
Updated On :18 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

எனது வாக்கு, எனது உரிமை, நூறு சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல,இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்ற உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.

ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி முதல்வா் அமிா்தவல்லி, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அலெக்ஸ், அகத்தியா் கலந்து கொண்டனா்.