தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் கடந்த இரு நாள்களாக சென்னையில் நடைபெற்றது.
இதுதொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தோ்தல் அலுவலா்கள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனா். தோ்தல் மேலாண்மையின் முக்கிய அம்சங்கள் மற்றும் தோ்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் நடைமுறை, தபால் வாக்குகள் மூலம் வாக்களித்தல், தோ்தல் திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள், ஊடகக் கண்காணிப்பு, வாக்காளா் பட்டியல் மேலாண்மை, முறையான வாக்காளா் கல்வி மற்றும் வாக்குப் பதிவு விழிப்புணா்வு நடவடிக்கைகள், வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள், வாக்குப் பதிவு தரவு செயலி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பேரவைத் தோ்தல் சட்டப்படி சுதந்திரமாகவும், நோ்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இது செயல்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


