காதியில் ஒரு புதிய அகராதி! இதோ உங்களுக்குப் பிடித்த டிசைனில் கலக்கும் காதி உடைகள்!

பொதுவாக ஆடைகள் விஷயத்தில் நேற்று இருக்கும் "ஸ்டைல்' இன்று இல்லை. இன்றைய ஸ்டைல் நாளை மாறிவிடும்.
காதியில் ஒரு புதிய அகராதி! இதோ உங்களுக்குப் பிடித்த டிசைனில் கலக்கும் காதி உடைகள்!

பொதுவாக ஆடைகள் விஷயத்தில் நேற்று இருக்கும் 'ஸ்டைல்' இன்று இல்லை. இன்றைய ஸ்டைல் நாளை மாறிவிடும். இந்த நியதிக்கு 'காதி' துணிமணிகள், ஆடைகள் மட்டும் விதிவிலக்காக இருக்குமா..?

நேற்று வரை, 'காதி' ஆடைகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் நத்தை வேகத்தில் இருந்து வந்தது. இப்போது அதிரடி மாற்றத்துக்கு 'காதி'யும் தயாராகிவிட்டது. உள்நாட்டு சந்தை மட்டுமில்லாமல் வெளிநாட்டுச் சந்தையையும் 'காதி' குறி வைத்திருக்கிறது. அதற்கேற்ற மாற்றங்களை துணிகளில் இருக்கும் டிசைன்களில், ஆடைகளின் வடிவமைப்புகளில் கொண்டு வந்துள்ளது.

அதிலும் பெண்கள் ஆடைகளில், ஜனரஞ்சக வடிவமைப்பில் ஆயத்த ஆடைகள் இதர பிராண்டுகளின் ஆடைகளுக்கு சவால் விடுகின்றன. முன்னணி ஆடை டிசைனர்களான ராஜேஷ் பிரதாப் சிங், ரோஹித் பால், அஞ்சு மோடி, பாயல் ஜெயின், பூனம் பகத், மனிஷ் மல்ஹோத்ரா போன்றோரின் வடிவமைப்பில் உருவான பெண்களின் கதர் ஆடைகளை பிரபலப்படுத்த அழகிகளை 'கேட் வாக்' வரச் செய்து 'காதி' அசத்தியுள்ளது. அழகிகள் அணிந்து வந்த விதம் விதமான ஆடைகளைத்தான் பார்க்கிறீர்கள்..!
 - சுதந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com