இந்த ஹேண்ட் பேக் விலை 1 லட்சம் ரூபாய், இது யாருடையது தெரியுமா?

உடைகளில், ஆபரணங்களில் மட்டுமல்ல தற்போது ஹேண்ட் பேக்குகளிலும் ஃபேஷன் மற்றும் காஸ்ட்லி மோகம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இது சின்ன சாம்பிள்.
இந்த ஹேண்ட் பேக் விலை 1 லட்சம் ரூபாய், இது யாருடையது தெரியுமா?

லேட்டஸ்ட் ஃபேஷன் என்ன தெரியுமா?

காஸ்ட்லி பிராண்டெட் ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வது? என்று பட்டென்று சொல்வீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஃபேஷன் சென்ஸ் இருக்கிறது என்று நம்பலாம்.

காஸ்ட்லி ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வது இப்போது ஒன்றும் அதிசயிக்கத் தக்க செய்தியில்லை. தனியார் இணைய ஊடகமொன்றில் இடம் பெறும் கேளிக்கை நிகழ்ச்சியின் பெயர் ‘இன்சைட் தி ஹேண்ட் பெக்’ பிரபலங்களை விருந்தினர்களாக அழைத்து அவர்களது ஹேண்ட் பேக்குகளில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று சோதித்து அதை ஆடியன்ஸுக்கு காண்பிப்பது தான் இந்த நிகழ்ச்சியின் எளிமையான கான்செப்ட். சிலர் குப்பை நிகழ்ச்சி என்று இதை கலாய்த்தாலும் தொடர்ந்து தவறவிடாமல் பார்த்து ரசித்தும் வருகிறார்கள். அந்தளவுக்கு யூ டியூபில் பெயர் போன நிகழ்ச்சியாக இது மாறி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது, செலிப்பிரிட்டி பெண்கள் தங்களது ஹேண்ட் பேக்குக்களுக்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் என்று. நம்மூரைப் பொருத்தவரை அவர் ஒரு டி வி பிரபலம். அந்தப் பெண் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, கொண்டு வந்து திறந்து காட்டிய ஹேண்ட் பேக்கின் விலை 3 லட்சமென்கிறார். இன்னொரு செலிப்பிரிட்டி இளம்பெண்ணோ, தான் பிராண்டெட் ஹேண்ட் பேக்குகள் மட்டும் தான் பயன்படுத்துவது வழக்கம் என்கிறார். பிராண்டெட் என்று போய் விட்டால் எப்படிப் பார்த்தாலும் குறைந்த பட்ச விலையே அரை லகரத்தைத் தொட்டுக் கொண்டு தான் நிற்கும். அப்படி இருக்க, இங்கே ஒரு பாலிவுட் நடிகரின் மனைவி 1 லட்சம் ரூபாய் விலையுள்ள ஹேண்ட் பேக் வாங்கிப் பயன்படுத்துவதில் அப்படியொன்றும் பெரிய அதிசயம் இல்லை தானே? 

மேலே புகைப்படத்தில் இருப்பவர் பாலிவுட் நடிகர் சாஹித் கபூரின் மனைவி. சாஹித் கபூரைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. பத்மாவத் திரைப்படத்தில், தீபிகா படுகோனின் கணவராக வந்து அலாவுதீன் கில்ஜியின் சூழ்ச்சியால் செத்துப் போவாரே அவரே தான் சாஹித் கபூர். அந்த சாஹித் கபூர் மணந்து கொண்ட பெண்ணின் பெயர் மீரா ராஜ்புத். அவர் நடிகை அல்ல. ஆயினும் கணவர் ஒரு ஸ்டார் என்பதால், கெத்தைக் காப்பாற்றிக் கொள்ள 1 லட்ச ரூபாய்க்கு ஹேண்ட் பேக் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த ஹேண்ட் பேகுடன், மீராவை புகைப்படமெடுத்து விட்ட பாப்பரஸிகள் சும்மா இருப்பார்களா? இதோ ஹேண்ட் பேக் சீக்ரெட் சந்திக்கு வந்து விட்டது. இந்த பேக்கை ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும்? என்று யாரும் கேட்டு விடாதீர்கள். 1 லட்ச ரூபாய் ஹேண்ட் பேக் என்றால் அதற்கேற்ப அந்த பேக் ஒரிஜினல் முதலை அல்லது பாம்புத் தோலில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். வெளிநாடுகளில் தயாராகும் இத்தகைய ஹேண்ட் பேக்குகளை இறக்குமதி செய்து பயன்படுத்துவது பாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல, தற்போது கோலிவுட் நடிகைகளும் தான் என்றாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடிகை சரண்யா பொன் வண்ணன் கூட தனது ‘இன்சைட் தி ஹேண்ட் பேக்’ நேர்காணல் செஷனில் இது குறித்துப் பகிர்ந்திருந்தார்;

‘முன்னால எல்லாம் எனக்கு காஸ்ட்லி பிராண்டெட் ஹேண்ட் பேக் மேல எல்லாம் இண்ட்ரெஸ்ட் இருந்ததில்லை. ஆனால், இப்போ, என் பெண்கள் சொல்கிறார்கள். நீங்க உங்களுக்குப் பிடித்த மாதிரி எதை வேண்டுமானாலும் உங்க இஷ்டத்துக்குஷாப்பிங் செய்துக்கோங்க, ஆனால், ஹேண்ட் பேக் மட்டும் நாங்கள் தான் வாங்கித் தருவோம்’ என. அவர்கள் தேடித்தேடி அன்பளித்தது தான் இப்போது நான் வைத்திருக்கும் இந்த காஸ்ட்லி பிராண்டெட் ஹேண்ட் பேக்’ - என்கிறார்.

ஆகவே சின்னத்திரை, பெரிய திரை நடிகைகளும், நடிகர்களின் இல்லத்தரசிகளும் காஸ்ட்லி ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வதில் அப்படியொன்றும் அதிசயமில்லை.

உடைகளில், ஆபரணங்களில் மட்டுமல்ல தற்போது ஹேண்ட் பேக்குகளிலும் ஃபேஷன் மற்றும் காஸ்ட்லி மோகம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இது சின்ன சாம்பிள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com