Enable Javscript for better performance
Bride atrocities... FASHION UPDATES (WEDDING MARKET)- Dinamani

சுடச்சுட

  

  மணப்பெண் அட்ராசிட்டீஸ்! இந்தக்காலத்துல பொண்ணுங்க இப்படியும் ரவிக்கை தச்சுப் போட்டுக்கறாங்கப்பா!

  By மாடர்ன் மங்கம்மா  |   Published on : 03rd June 2019 03:31 PM  |   அ+அ அ-   |    |  

  sheer_blouse

   

  திருமணம்... அன்னைக்கு யார் ஹீரோ, ஹீரோயின்ஸ்? கண்டிப்பா பொண்ணும், மாப்பிள்ளையும் தான். அப்போ அந்த முழு நாளும் அவங்களுக்கே, அவங்களுக்கு தானே சொந்தம்! ஸோ, தன்னை எப்படி எல்லாம் அழகு படுத்திக்கலாம்கறதை இப்போ மொத்தமும் பெண்களே முடிவு செய்திடறாங்க. முன்னாடி மாதிரி அப்பா, அம்மா, சித்தி, அத்தை, பாட்டி, மாமான்னு யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் அவங்க விடறதா இல்லை. இன்விடேஷன் டிசைன் பண்றதுல தொடங்கி, திருமண டிரஸ் டிசைன், மணவறை அலங்காரம், அன்றைய மேக் அப், ஃபோட்டோகிராபி (இதுல போஸ்ட் வெட்டிங், ப்ரி வெட்டிங்னு எல்லாம் வந்தாச்சு இப்போ), ரிஷப்சன் கச்சேரி களை கட்ட டிஜே செலக்‌ஷன், திருமணத்துக்குப் பிறகான ஹனிமூன் டெஸ்டினேஷன் செலக்‌ஷன்னு எல்லாப் பொறுப்பையும் தன்னோட பொறுப்பிலேயே எடுத்துக்கிட்டு ஜமாய்க்கிறாங்க இந்த தலைமுறை மணப்பெண்களும், மணமகன்களும். இதில் மணமகன்களின் பொறுப்பு பர்ஸை மணப்பெண்ணிடம் அடமானம் வைப்பதோட முடிஞ்சிடறதுன்னு யாராவது கலய்ச்சீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. சும்மா ஒரு அளவுக்குத்தான் சொல்ல முடியும். மீதியெல்லாம் நீங்களா கற்பனை பண்ணிக்க வேண்டியது தான்.

  சரி இப்போ அதில்லை பிரச்னை...

  ஃபேஷன் அட்டேட்ஸ்க்காக தேடும் போது இந்த ஃபோட்டோ கண்ல சிக்குச்சு. இது நிச்சயம் வருங்கால மணப்பெண்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டிய விஷயமாச்சேன்னு தான் உடனே அப்டேட் பண்ண வேண்டியதாயிடுச்சு :))

  இன்றைய தலைமுறை மணப்பெண்களின் ரவிக்கை டிசைன்கள் நம்ம கற்பனை எல்லைகளையும் தாண்டி சிறகு விரித்துப் பறந்துருக்கு பாருங்க. 

  டிசைன் நம்பர் 1

  இந்த மணப்பெண் அணிந்திருக்கும் ரவிக்கையின் முதுக்குப்புறம் இது. ஐய்யோ... இதென்ன திறந்த முதுகுல இப்படிப் பேரை எழுதி வச்சுருக்காளேன்னு யாரும் திட்டிடாதீங்க. அது திறந்த முதுகு இல்லை. இதுக்கு பேர் Sheer Blouse Design, அதாவது, பழைய படங்கள்ள நடிகைகள் அரசிளங்குமரியா வேஷம் கட்டும் போது உடலின் திறந்த பகுதிகள் வெளியே தெரியா வண்ணம் ஏதோ ஒரு மெட்டீரியலில் ஸ்கின் மாதிரி ஒரு அங்கி மாட்டி இருப்பாங்க. நம்ம கண்ணுக்கு அது தோல் மாதிரி தெரிஞ்சாலும், அங்கே தோலை விட மெல்லிய சல்லாத்துணியால் சருமம் மூடப்பட்டிருக்கும். பார்க்க திறந்த முதுகு போலத் தெரிந்தாலும் அங்கே துணி மூடியிருக்குன்னு தான் அர்த்தம், அந்த மாதிரி சல்லாத்துணியில் டிசைன் செய்யப்பட்டது தான் இந்த ரவிக்கை. அட, எதுக்கு இந்த கர்மம்?! பேசாம அழகா ரவிக்கை தச்சு போட்டுக்கலாமேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது! ஆனாலும், பாருங்க. இதுக்குப் பேர் தான் ஃபேஷன் படுத்தும் பாடு. அதனால தான் மணப்பெண்கள் வித்யாசம்க்ற பேர்ல இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. 

  ஒன்னும் மட்டும் போதுமா? இன்னும் சில சாம்பிளையும் பாருங்களேன்.

  ரவிக்கையில் வேடிக்கையான டிசைன்கள்...

  ரவிக்கையில் மட்டுமா? லெஹங்காவிலும் கூட இதை ட்ரை பண்ணலாம் வாங்க...

  லெஹங்கா மட்டுமா? இதோ மெஹந்தி அன்னைக்கு கூட இப்படி டிசைன் பண்ணிப்பேன்.

  மணப்பெண்களின் இத்தகைய முயற்சிகள் ரசனையின் எல்லைக்குள் இருக்கும் வரை யாருக்கும் எந்த ஒரு பிரச்னையும் இருக்கப் போவதில்லை. ரசனை என்பது எல்லை மீறாததாக இருந்தால் எல்லோராலும் அது நிச்சயம் ரசிக்கப்படும் என்பதற்கு இந்த முயற்சிகள் உதாரணங்கள் ஆகின்றன.
   

  kattana sevai