‘எனக்குப் பிடிக்காததை எல்லாம் நான் செய்யறேன்னா காரணம் இது டேலண்ட் பிஸினஸ்’: ஃபிட்னஸ் குறித்து மிலிந்த் சோமன்!

வாழ்வின் இத்தனை வெற்றிக்கும் நான் பிரத்யேகமாக மெனக்கெட்டு எதுவும் செய்ததில்லை. நீச்சல் பயிற்சி என்பது எனக்கு அனிச்சை செயல் மாதிரி. அதே போல ஃபிட்னஸுக்க்காக உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சலித்துக் க
‘எனக்குப் பிடிக்காததை எல்லாம் நான் செய்யறேன்னா காரணம் இது டேலண்ட் பிஸினஸ்’: ஃபிட்னஸ் குறித்து மிலிந்த் சோமன்!

இந்தியாவின் ஆண் சூப்பர் மாடல் லிஸ்டில் எப்போதும் மிலிந்த் சோமனுக்கு முதலிடம் உண்டு. மனிதருக்கு 50 வயதான பின்னும் பார்க்க பக்கா பெர்ஃபெக்ட் ஃபிட்னஸுடன் அசத்துகிறார். இப்படி இருக்க, நீங்க எத்தனை மணி நேரம் ஜிம்மில் தவம் கிடக்கிறீர்கள் என்று கேள்விக்கு, ஐயோ ஜிம்மில் தவமெல்லாம் ஆகற கதையில்லை, நான் எனக்குத் தோன்றும் போது தோன்றும் உடற்பயிற்சிகளைச் செய்வேன். அதற்காக தனியாக நேரம் ஒதுக்குவதெல்லாம் இல்லை என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

‘என்னைப் பொறுத்தவரை நான் சிறுவனாக இருக்கும் போதிருந்தே ஃபிட்டாகத் தான் உணர்கிறேன், இருக்கிறேன். காரணம் தனிப்பட்ட சிரத்தைகள் எதுவும் இல்லை. 9 வயது முதலே நானொரு ஸ்விம்மர். தொடர்ந்து நீச்சல் பயிற்சிகளில் பங்கேற்று தேசிய அளவிலான நீச்சல் சாம்பியனாக இருந்தேன். நீச்சல் மிகச்சிறந்த உடற்பயிற்சி. அதை இடைவிடாமல் பின்பற்றியதால் என்னுடைய உடல் எப்போதும் ஃபிட்டாகவே இருந்தது.

தவிர நான் மிகவும் கூச்ச சுபாவி என்பதால் மாடலிங்கில் நுழைய வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைத்துப் பார்த்தது இல்லை. ஒரு நாள் திடீரென யாரோ ஒருவர் என்னைப் பார்த்து, நீ பார்க்க மேன்லியாக இருக்கிறாய், மாடலிங் செய்தால் சூப்பராக ஷைன் ஆவாய் என்றார்கள். இந்த ஆஃபர் நன்றாக இருக்கிறதே, என்று அதை ஏற்றுக் கொண்டு அதற்காக முயற்சித்தேன். இதோ இன்று உங்கள்முன் சூப்பர் மாடலாக இருக்கிறேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், என் வாழ்வின் இத்தனை வெற்றிக்கும் நான் பிரத்யேகமாக மெனக்கெட்டு எதுவும் செய்ததில்லை. நீச்சல் பயிற்சி என்பது எனக்கு அனிச்சை செயல் மாதிரி. அதே போல ஃபிட்னஸுக்க்காக உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சலித்துக் கொள்வதுமில்லை. 2 நிமிடம் கிடைத்தாலும் எனக்குப் பிடித்த ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்கிறேன்.

எனக்கு விருப்பம் இருக்கும் போது அல்லது விளம்பர வாய்ப்புகள் கோரும் போது ஃபிட்னஸ் மராத்தான்களில் கலந்து கொண்டு ஓடுகிறேன். ஒருமுறை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தார் என்னை அவர்களது பிங்கத்தான் பந்த்யங்களின் விளம்பரத்ட் தூதுவர் ஆக்கினார்கள். அதில் கலந்து கொண்டது முதல் எனக்கது பிடித்துப்ப் போய் விட்டது. முதலில் மராத்தான் ஓட்டங்களில் எனக்கு ஆர்வமில்லாமல் இருந்தது உண்மை. ஆனால், இப்போது அதில் மிகப்பெரிய ஆர்வம் வந்து விட்டது. அதுவும் நன்றாகத்தானே இருக்கிறது என்று இப்போது அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

என் வாழ்க்கையின் விசித்திரம் இது தான். ஃபிட்னஸுக்கு என்று தனியாக நான் எதையும் திட்டமிடுவதில்லை. என் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும், திரையில் என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் நன்றாகத் தெரியவேண்டும் என்பதற்காக, சுருக்கமாகச் சொல்வதென்றால் என் திறமைகளை நான் விற்பனை செய்வதற்கு இது அவசியம் என்பதால் இதை நான் அனிச்சையாகத் தொடர்ந்து செய்து வருகிறேன். ஆரம்பத்தில் என்னை யாராவது புகைப்படம் எடுத்தால் எனக்கு அது பிடிக்காது. ஆனால், அதுவே தொழில் என்று வரும்போது எப்படி புகைப்படம் எடுத்தால் நான் அழகாகத் தெரிவேன், ஃபிட்டாக இருப்பேன் என்பதைக் கற்றுக் கொண்டேன். இப்போது எனக்கது அத்துப்படி. என் திறமையும், உழைப்பும் சிறந்த முறையில் வெளிவர வேண்டுமென்றால் நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறேன். இது முற்றிலுமாக டேலண்ட் பிஸினஸ் என்பதை நான் புரிந்து கொண்டேன். இதை எல்லோருமே புரிந்து கொண்டால் ஃபிட்னஸுக்காக எதையும் வலிந்து செய்ய வேண்டியதில்லை. அது தானாக நமது வாழ்க்கைமுறைகளில் வாட் ஐ மீன் லைஃப்ஸ்டைல்களில் ஒன்றாகி விடும். பிறகது எப்போதும் சுமையாகவோ, குற்ற உணர்வாகவோ இருக்காது. 

அதுசரி! இந்தியாவின் சூப்பர் மாடல் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com