ஜிமிக்கி, கம்மல் ஃபேன்ஸ்... இந்த விஷுவல் ட்ரீட் உங்களுக்குத் தான்!

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக் கூடிய விதத்தில் விலையும் சல்லிசாகக் கிடைப்பதால் இத்தகைய ஃபேஷன் காதணிகளுக்கு வரவேற்பு எகிறிக் கொண்டிருக்கிறது.
ஜிமிக்கி, கம்மல் ஃபேன்ஸ்... இந்த விஷுவல் ட்ரீட் உங்களுக்குத் தான்!

ஃபேஷன் உலகில் ஒவ்வொரு வருடமும் புதுமைகள் நிகழ்ந்த காலம் மாறி இப்போதெல்லாம் மாதா மாதம் ட்ரெண்ட் மாறிக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட அது வாரா வாரம் அப்டேட் ஆகக்கூடிய நிலை வந்து விட்டது எனும் நிலையில் பெண்களின் காதணிகளில் இந்த மாதத்தைய ஸ்பெஷல் அப்டேட்டுகள் என்னென்னவென்று பார்ப்போமா?

இப்போதெல்லாம் தங்கமும், வைரமும் அணிந்து கொண்டு அலுவலகங்களுக்குச் செல்லும் வழக்கம் அரிதாகி விட்டது. திருட்டு பயம் ஒருபக்கம் என்றால் மேட்சிங் சென்ஸ் இன்னொரு பக்கம் இருந்து கொண்டு பெண்களைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. எனவே இதுமாதிரியான ஸ்டேஷனரி அக்ஸஸரிஸ் அதாவது கோல்டு கவரிங் ஆபரணக் கடைகளில் கூட்டம் எப்போது பார்த்தாலும் நிரம்பி வழிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி பெண்கள் வயது வித்யாசங்கள் ஏதுமின்றி குறைந்த பட்சம் தங்களைத் தாங்களே ரசிக்கும்படியாகவாவது ஃபேஷன் ஜுவல்லரிகளை அணிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது தான் இப்பொருட்களுக்கான வரவேற்பின் முதல் காரணி என்று சொல்லலாம்.

சரி ஃபேஷன் உலகின் இப்போதைய ட்ரெண்ட் என்ன தெரியுமா?

கனமான பெரிய பெரிய காதணிகளே! 

அவற்றை பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளத் தெரிந்திருந்தால் போதும்.. பிறகு கழுத்தணி ஏதும் கூட அணியத் தேவை இல்லை.

வெறும் கழுத்தாக வைத்துக் கொண்டு புடவையை மட்டும் சற்று கிராண்டாக உடுத்துக் கொள்வது தான் இன்றைய ஃபேஷன்.

இது முதலில் வட இந்திய மெகா சீரியல்கள் வாயிலாகப் பரவி இன்று நம் தமிழ் மெகா சீரியல்கள் நாயகிகள் வாயிலாக சாதாரண வெகுஜனம் வரையிலும் மிக நன்றாகவே ரீச் ஆகியிருக்கிறது.

இன்றைக்கு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவிகள் தவிர்த்து கிராமங்களிலேயே வசிக்கக் கூடிய இல்லத்தரசிகள் வரையிலும் கூட இவ்விதமான காதணிகள் ட்ரெண்டிங்கில் தான் உலவுகின்றன.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக் கூடிய விதத்தில் விலையும் சல்லிசாகக் கிடைப்பதால் இத்தகைய ஃபேஷன் காதணிகளுக்கு வரவேற்பு எகிறிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com