வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பனீர் ஸ்டப்டு பாசிப்பயிறு சப்பாத்தி!

பெரிய சப்பாத்தியின் நடுவில் வதக்கி வைத்துள்ள கலவையை பரவலாக வைக்கவும். அதன் மேல் சிறியதாக போட்டு வைத்துள்ள சப்பாத்தியை

News image
Updated On :7 செப்டம்பர் 2016, 11:06 am

தேவையானவை:
கோதுமை மாவு - 4 கிண்ணம்
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
முளைக் கட்டிய பச்சைப்பயறு - ஒரு கிண்ணம்
பெரிய வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
முட்டைக்கோஸ் - ஒரு கிண்ணம்
பனீர் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை: குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டைக்கோஸ் மற்றும் பனீரை மெல்லியதாக துருவி வைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, நல்லெண்ணெய் மற்றும் வெந்நீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். முளைக் கட்டிய பயறை ஆவியில் வேக வைத்து எடுத்து ஆறவைக்கவும்.

ஆறியவுடன் பச்சைமிளகாய் சேர்த்து (தண்ணீர் இல்லாமல்) கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பயறு, தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பனீரைச் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்தியாக போட்டுக் கொள்ளவும். (ஒரு சப்பாத்தி பெரியதாகவும், மற்றொன்று அதைவிடச் சற்று சிறியதாகவும் இருக்கும்படி போட்டுக் கொள்ளவும்). பெரிய சப்பாத்தியின் நடுவில் வதக்கி வைத்துள்ள கலவையை பரவலாக வைக்கவும். அதன் மேல் சிறியதாக போட்டு வைத்துள்ள சப்பாத்தியை வைத்து ஓரங்களை மடித்து மூடவும். இதேபோன்று அனைத்து சப்பாத்திகளையும் தயார் செய்து, தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சப்பாத்திகளைச் சுட்டு எடுக்கவும். சுவையான, பனீர் பச்சைப்பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.