உருளைக் கிழங்கைப் பற்றி 5 மொறு மொறு தகவல்கள்

உருளைக் கிழங்கை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து, சாம்பார் அல்லது தயிர் சாதத்துடன்
உருளைக் கிழங்கைப் பற்றி 5 மொறு மொறு தகவல்கள்

உருளைக் கிழங்கை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து, சாம்பார் அல்லது தயிர் சாதத்துடன் சாப்பிடும்போது, எளிமையான அந்த உணவு அதீதமாக ருசிக்கும். அரிசி, கோதுமைக்கு அடுத்து மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். எல்லா நாட்டிலும், எத்தகைய தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் உருளை உள்ளது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் இந்தப் பதார்த்தத்தைப் பார்க்கலாம்.

100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97. இதில் ஈரப்பதம் 75%, புரதம் 2%, கொழுப்பு 0.1%, தாது உப்புகள் 0.61%, நார்ச்சத்து 0.41% மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவைத் தவிர வைட்டமின் சி 17 மில்லி கிராமமும், கால்ஷியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லி கிராமும், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாஷியம் ஆகியவையும் இதிலுள்ளன.

உருளைக் கிழங்கை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ சமைத்து சாப்பிட்டாலும் அதன் மருத்துவக் குணம் மாறவே மாறாது என்கின்றனர் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும் என்பது இதன் சிறப்பம்சம்.

தினமும் பாலும், உருளைக்கிழங்கும் சாப்பிட்டால் ஒருவர் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட் உருளைக்கிழங்கில் அதிகளவில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com