ஒபிஸிட்டி குறைய குடம்புளி ஜூஸ்!

குடம்புளி ஜூஸ் செரிமானத்தை அதிகரிப்பதோடு, பசிக்கும் தன்மையை தன்னிறைவு பெறச் செய்யுமாம். இதனால் அடிக்கடி பசித்து எதையாவது சாப்பிடும், கொறிக்கும் பழக்கம் தடை படும். எனவே உடல் எடை தானாகவே குறையும்
ஒபிஸிட்டி குறைய குடம்புளி ஜூஸ்!

தேவையான பொருட்கள்: 

குடம்புளி: 5 துண்டுகள்
பனை வெல்லம்: 4 துண்டுகள்
ஏலப்பொடி: 1 சிட்டிகை
சுக்கு: 1 சிட்டிகை


செய்முறை:


குடம்புளியை முதல் நாள் இரவே ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் புளி கரைந்த நீரை வடிகட்டி தனியாக ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். பனை வெல்லம் முங்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை அதைக் காய்ச்சி ஆறியதும் வெல்லக் கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது குடம்புளி கரைசல் மற்றும் வெல்லக் கரைசல் இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அடுப்பில் ஒரு கொதி வரும் வரை சூடாக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டி சுக்குப் பொடி, ஏலப்பொடி தூவி பரிமாறலாம். இந்த குடம்புளி ஜூஸ் செரிமானத்தை அதிகரிப்பதோடு, பசிக்கும் தன்மையை தன்னிறைவு பெறச் செய்யுமாம். இதனால் அடிக்கடி பசித்து எதையாவது சாப்பிடும், கொறிக்கும் பழக்கம் தடை படும். எனவே உடல் எடை தானாகவே குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com