அரிசி, கோதுமை வேண்டாம்; ஆம்லெட், சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போதுமே ப்ரேக்ஃபாஸ்டுக்கு!

அரிசி, கோதுமை வேண்டாம்; ஆம்லெட், சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போதுமே ப்ரேக்ஃபாஸ்டுக்கு!

இரண்டு முட்டைகள் மற்றும் கணிசமான அளவு காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வதால் மதியம் லஞ்ச் சாப்பிடும் வரை உற்சாகமாகவே இருக்க முடியும். 

இப்போதெல்லாம் மார்கெட்டிங் துறை தவிர அலுவலகத்தில் டெஸ்க் வொர்க் வகை  வேலைகளில் ஈடுபடும் பெரும்பாலனோருக்கு உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. காலையில் போய் டெஸ்கில் அமர்ந்தால் இடையிடையே காஃபி, டீ, ஸ்நாக்ஸுக்கு எழுவது தவிர வேறு எந்த விதமான உடல் அசைவுகளும் அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. இப்படியான வேலைகளில் ஈடுபடுவோருக்கு காலையில் பிரேக்ஃபாஸ்டாக 4 இட்லிகளோ, 3 சப்பாத்திகளோ சாப்பிட்டு விட்டுச் சென்றால் கூட அது மதிய லஞ்ச் க்குள் செரித்து மீண்டும் பசி எடுக்குமா? என்றே தெரிவதில்லை. ஆனால் சரியாக 1 மணிக்கு சாப்பாட்டு நேரத்தில் லஞ்ச் வேறு எடுத்தாக வேண்டும். இப்இப்டி முதலில் உண்ட உணவு செரித்ததா? இல்லையா? என்பதையே உனராமல் மூன்று வேலையும் பல்க்காக உண்டால் என்ன ஆகும்? நாளடைவில் ஒபிஸிட்டி வரும். வேறென்ன?! அப்படியான வருத்தம் யாருக்கேனும் இருக்குமென்றால் பிரேக்ஃபாஸ்டுக்கு இங்கே உள்ள ரெசிப்பியை பின்பற்றிப் பார்க்கலாம். இது ஆரோக்கியமானது என்பதோடு ஃபார்ச்சூன் விளம்பரத்தில் சொல்லப்படுவது போல வெரி வெரி லைட்டானதும் கூட !

தேவையான பொருட்கள்:
ஆம்லெட்டுக்கு:
முட்டை: 2
சின்ன வெங்காயம்: 10 (பொடியாக அரிந்தது)
கேரட்: 1( பொடியாக அரிந்தது)
பச்சை மிளகாய்: 2 (பொடியாக அரிந்தது)
உப்பு: தேவையான அளவு

செய்முறை: ஒரு கப்பில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அவற்றோடு சின்ன வெங்காயம் மற்றும் கேரட் + பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி தோசைக்கல்லில் ஆம்லெட்டுகளாக ஊற்றி பொன்னிறமாக  வார்த்து எடுக்கவும்.

சாலட்டுக்கு:
பெங்களூர் தக்காளி: 2 (ஸ்லைஸ் செய்து கொள்ளவும்)
கேரட்: 2 (ஸ்லைஸ் செய்து கொள்ளவும்)
வெள்ளரிக்காய்:1 (ஸ்லைஸ் செய்தது)

மூன்றையும் ஸ்லைஸ்களாக நறுக்கி அப்படியே சாப்பிட வேண்டியது தான்.

ஃப்ரெஷ் ஜூஸ் தயாரிக்க:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள், ஆரஞ்சு, நெல்லிக்காய், வாட்டர்மெலன், சப்போட்டா, பப்பாளி, மஸ்க் மெலன், மாதுளை என சீஸனுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு பழவகை.

சர்க்கரை அல்லது தேன்...

ஆரோக்கியத்தில் விருப்பமுள்ளவர்கள் எனில் சர்க்கரை சேர்க்காமல் குறைந்த அளவு தேன் கலந்து அருந்துவது நல்லது. அப்படியே ராவாக அருந்தினாலும் சரி தான். சர்க்கரை கலந்து தான் அருந்துவீர்கள் என்றால் உங்களது சுவைக்குத் தக்க சர்க்கரை சேர்க்கலாம்.

காலையில் அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் காய்கறி பழங்களை நறுக்கிக் கொண்டிருக்க முடியாது என்று நினைப்பவர்கள் முதல் நாளே காய்கறி பழங்களை நறுக்கி ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டு மறுநாள் பயன்படுத்தலாம். பிறகு காலையில் உங்களுக்கு ஆம்லெட் ஊற்றுவதும், ஃப்ரெஷ் ஜூஸ் அரைப்பது மட்டுமே தான் வேலை.

இரண்டு முட்டைகள் மற்றும் கணிசமான அளவு காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வதால் மதியம் லஞ்ச் சாப்பிடும் வரை உற்சாகமாகவே இருக்க முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com