சாஃப்ட் ட்ரிங்ஸ் அல்லது குளிர் பான வகையறாக்களை பரிமாறுவதற்கென்றே வீட்டில் உயரமான பெரிய கண்ணாடி டம்ளர்கள் வைத்திருப்போமே, அதை வெளியில் எடுங்கள். டம்ளரில் முதலில் நாஙைந்து புதினா இலைகளைப் போட வேண்டும். கூடவே அரை எலுமிச்சையை குவார்ட்டர் பீஸ்களாக கட் செய்து புதினா இலைகளின் மீது போடலாம். பின்னர் ஃப்ரிஜ்ஜில் இருந்து 15 ஐஸ் கியூப்களை வெளியில் எடுத்து கிச்சன் டவலில் கொட்டிக் கொண்டு அதை வீட்டில் இஞ்சி நசுக்க வைத்திருக்கும் சின்ன கல்லால் நசுக்கவும். இப்போது ஐஸ் கியூப்கள் ஐஸ் துகள்களாக மாறி இருக்கும். அதை அப்படியே கண்ணாடி டம்ளரில் இருக்கும் புதினா, எலுமிச்சை கலவையின் மீது கொட்டி, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரிக்கட்டையின் பின் புறத்தால் மெதுவாக நசுக்கவும். சர்க்கரை கலந்ததும் இப்படி நசுக்குவதால் புதினா, எலுமிச்சை நன்கு கலந்து அருமையான ஃப்ளேவரில் மணம் நாசியை நெருடும். பிறகு நசுக்குவதை நிறுத்தி வீட்டில் ஸ்ப்ரைட் இருந்தால் அதை டம்ளரில் முக்கால் பாகத்துக்கு நிரப்பி நன்கு கலக்கவும். ஸ்பிரைட் தான் கலக்க வேண்டும் என்றில்லை. செவன் அப் அல்லது லைம் சோடாவும் கலக்கலாம், இப்போது கண்ணாடி டம்ளரின் வாய்பகுதியில் ஸ்லைஸ் செய்யப்பட்ட எலுமிச்சையை அலங்காரமாக சொருகி டம்ளரின் மேல் பகுதியில் ஓரிரு புதினா இலைகளை மிதக்க விட்டுப் பரிமாறலாம். அருமையான ஃபிளேவரில் ரெஸ்டாரெண்டுகளில் பரிமாறப்படும் வெர்ஜின் மொஜிட்டோ இப்போது நம் வீட்டு சாப்பாட்டு மேஜையிலும் ரெடி.