ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா?

பஜ்ஜி மாவில் பொடியாக நறுக்கிய புதினா, ஓமவல்லி இலை அல்லது வெற்றிலை சேர்க்கலாம் - நல்ல வாசனையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.
ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா?
Published on
Updated on
1 min read

பஜ்ஜி மாவில் பொடியாக நறுக்கிய புதினா, ஓமவல்லி இலை அல்லது வெற்றிலை சேர்க்கலாம் - நல்ல வாசனையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.

புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால். இரவில் நல்ல உறக்கம் வரும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

இருமல், கபம் முதலியவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பாதுஷா செய்யும் போது மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, சிறிதளவு வனஸ்பதியையும், நெய்யும் சேர்த்தால் பாதுஷா மிருதுவாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும்.

ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா? கோதுமை மாவைப் பிசையும் போதே ஒரு தேக்கரண்டி சோயாமாவு, அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் போதும். பூரிஉப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமர்த்தும் போகாது.
வேக வைத்த உருளைக் கிழங்குடன் அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப் பொடி பிழிந்தால் பிரமாதமான சுவையுடன் இருக்கும்.

நாலு டம்ளர் கோதுமை மாவுக்கு அரை டம்பளர் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து கோதுமையுடன் கலந்து உப்பு போட்டு கரைத்து தோசை வார்த்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

பாதாம் அல்வா கிளறும் போது ஊறிய பாதாம் பருப்புடன் குங்குமப் பூவையும் போட்டு அரைத்தால் நிறமும் மணமும் தூக்கலாக இருக்கும்.

வெண்பொங்கல் செய்து பக்குவம் ஆனதும் குக்கரை திறந்து காய்ச்சிய பாலில் ஒரு கரண்டி விட்டுக் கிளறி மூடினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லி மிளகாய் பொடியில் எண்ணெய் ஊற்றிக்கொள்வதற்குப் பதிலாக தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ருசியாகவும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com