சுவையும் சத்தும் நிறைந்த கேரட் கேசரி சாப்பிட்டு இருக்கிறீர்களா?

வாணலியில் சிறிதளவு நெய்யை விட்டு லேசாகச் சூடாக்கவும்.
சுவையும் சத்தும் நிறைந்த கேரட் கேசரி சாப்பிட்டு இருக்கிறீர்களா?

கேரட் அல்வா சாப்பிட்டு இருப்போம். ரவா கேசரியும் பலமுறை சுவைத்திருப்போம். இதென்ன கேரட் கேசரி? குழந்தைகளை கேரட் சாப்பிட வைக்கும் ஒரு அம்மா கண்டுபிடித்த ரெசிபியாகத் தான் இது இருக்கும். கேரட்டை துருவி அதை தோசை மாவில் போட்டு கேரட் தோசை என்று கொடுத்தால், சில பிள்ளைகள் கவனமாக கேரட்டை நீக்கிவிட்டு தோசையை சாப்பிடும் கலையை கற்றுக் கொள்கிறார்கள். கேரட் கண்ணுக்கு நல்லது என்று பொதுபுத்தியிலிருந்து ஏதாவது சொல்வீர்கள் என்றால், எவன் சொன்னான் அவனை முதல்ல வரச் சொல்லு என்று வியாக்யானம் படிப்பார்கள். பேசாமல் அவர்களுக்குப் பிடித்த வகையில் இனிப்பாகவே கொடுத்துவிட்டால் வாதம் செய்யாமல் சாப்பிட்டுவிடுவார்கள். இது ஒரு எளிமையான ரெசிபி. முயற்சித்துப் பாருங்கள் அதன் பின் அடிக்கடி கேரட் கேசரியை நீங்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள்.

தேவையானவை:

ரவை - 1/2 கப்
கேரட் விழுது - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
முந்திரி, பிஸ்தா, பாதம் - தேவைக்கேற்ப
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - 1/4 கப்
 

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்யை விட்டு லேசாகச் சூடாக்கவும்.

முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்புக்களை சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையை வறுக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ரவை, கேரட் விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் வேகும் வரை கிளறவும்.

பின்னர் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் கேசரியைச் சமமாக பரப்பி, சதுரமாக அல்லது டயமெண்ட் ஷேப்பில் வெட்டி எடுக்கவும்.

சுவையான கேரட் கேசரி தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com