ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பள்ளி மாணவர்களுக்கான நிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வு அறிவிப்பு!

நிதி கல்விக்கான இந்த தேசிய அளவிலான தேர்வை மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே எழுத முடியும்.

News image
Updated On :2 நவம்பர் 2016, 12:13 pm

இரா. மகாதேவன்

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கீழ் இயங்கும் (SEBI), தேசிய பங்குச் சந்தை கழகத்தின் (NISM) ஓர் அங்கமான நிதி கல்விக்கான தேசிய மையம் (NCFE) என்ற அமைப்பு தேசிய நிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வை நடத்துகிறது.

நிதி கல்விக்கான இந்த தேசிய அளவிலான தேர்வை மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே எழுத முடியும். இதற்கான பதிவு இணையம் வழியாக மட்டும் அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் மத்திய, மாநில அரசுகளில் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். என்எப்எல்ஏடி ஜூனியர் 2016-17 என்ற பிரிவில் 6-8 வகுப்பு மாணவர்களும், என்எப்எல்ஏடி 2016-17 என்ற பிரிவில் 9, 10-ம் மாணவர்களும் தேர்வு எழுதலாம்.

இந்த இரண்டு பிரிவு தேர்வுகளையும் பங்கேற்கும் பள்ளிகள் தங்கள் வளாகத்திலேயே நடத்திக் கொள்ளலாம். போதுமான கணினிகள், இணையதள இணைப்பு உள்ள பள்ளிகள் ஆன்லைன் தேர்வை நடத்தலாம். இந்தத் தேர்வை பள்ளிகள் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி, 2017, ஜனவரி 7-ம் தேதி வரை 45 நாட்களுக்குள் தங்களுக்கு வசதியான வெவ்வேறு நாட்களில், ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் நடத்தலாம். ஆன்லைன் தேர்வை நடத்துவதற்குத் தேவையான உதவிகளை நிஸம், என்சிஎப்இ அமைப்பு வழங்கும். மாணவர்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஒரு மாணவருக்கு ரூ. 10 வீதம் இந்த அமைப்பு வழங்கும்.

தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கான தேர்வு நாள், நேரத்தை அந்தந்த பள்ளிகளே மாணவர்களுக்கு வழங்கும். தேவைப்படும் மாணவர்களுக்கு தேர்வு நாள், நேரத்தை பள்ளிகளே மாற்றிக்கொடுக்கலாம்.

கணினி, இணைய வசதி இல்லாத பள்ளிகளும் ஆன்லைன் மூலம் தங்களையும், மாணவர்களையும் பதிவு செய்துகொண்டு ஆப்லைனில் எழுத்துத் தேர்வை  நடத்தலாம்.  இதற்குத் தேவையான கேள்வித்தாள்கள், விடைத்தாள்களை (ஓஎம்ஆர் சீட்) நிஸம், என்சிஎப்இ அமைப்பு வழங்கும். ஆப்லைன் தேர்வு வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி, 10-ஆம் தேதிக்குள் நடைபெறும்.

தேர்வில் பங்கேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மண்டல, தேசிய அளவிலான போட்டிகள் 2017, பிப்ரவரி 1 முதல் 28-ம் தேதிக்குள்  நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு:   www.nflat.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.