தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அவரவர் தொழிலை அடையாளப் படுத்தும் மின்னஞ்சல் முகவரிகள்!

இந்த மின்னஞ்சல் அமைப்பிடமிருந்து புதிய மின்னஞ்சல் முகவரியைப் பெற விரும்புபவர்கள் http:www.mail.comin-en எனும் முகவரிக்குச் செல்லவும்.

News image
Updated On :3 நவம்பர் 2016, 6:46 am

மு.சுப்பிரமணி

மின்னஞ்சல் (Email) என்றவுடன் ஜிமெயில் (gmail), யாகூமெயில் (yahoomail), ஹாட்மெயில் (Hotmail), ரெடிஃப் மெயில் (rediffmail)என்று குறிப்பிட்ட சில மின்னஞ்சல் சேவைகளையே அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். இந்த அமைப்புகளின் வழியாகக் கிடைக்கும் மின்னஞ்சல் முகவரியில் நமக்கு மின்னஞ்சல், பயனர் பெயருடன் குறிப்பிட்ட மின்னஞ்சல் சேவையமைப்பின் தள முகவரி சேர்த்து நமக்கு மின்னஞ்சல் முகவரியாகக் கிடைக்கிறது.

சிலர் நம்முடைய தொழில் தொடர்பான முகவரி கிடைத்தால் நன்றாக இருக்குமென்று விரும்புகிறார்கள். சிலர் தங்களுடைய பொழுதுபோக்குக்கு ஏற்ற மின்னஞ்சல் முகவரியாக இருந்தால் நன்றாக இருக்குமென்று விரும்புகிறார்கள். இதுபோல் சிலர் தொழில்நுட்ப முகவரியையும், சிலர் இசை தொடர்பான முகவரியையும், சிலர் நாட்டுப் பெயருடனான முகவரியையும், சிலர் ஆன்மிகம் தொடர்புடைய முகவரியையும் விரும்புகிறார்கள்.

இவர்களது விருப்பத்தையெல்லாம் கணக்கில் கொண்டு வேலை (Profession), பொழுதுபோக்குகள் (Hobbies), தொழில்நுட்பம்(Technology), இசை (Music), அமெரிக்கா (USA), உலகம் (World)மற்றும் ஆன்மிகம் (Spiritual) போன்ற ஏழு பிரிவுகளிலான தலைப்புகளில் 200 பெயர்களிலான மின்னஞ்சல் முகவரிகளை அளிக்கிறது.

உதாரணமாக, வேலை (Profession) எனும் தலைப்பில் நாம் ஒரு பொறியாளராக இருந்தால் நம்முடைய மின்னஞ்சலில் பயனர் பெயருக்குப் பின்னால் பொறியாளர் என்பதை அடையாளப்படுத்தும் விதமான பிரிவைத் தேர்வு செய்து @engineer.com எனும் முகவரியைப் பெற முடியும். இது போல் மருத்துவராக இருந்தால் @doctor.com என்றும், பத்திரிகையாளராக இருந்தால்@journalist.com என்றும் மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொள்ளலாம். இங்கு பல்வேறு தொழில்கள் பெயரிலான மின்னஞ்சல் முகவரிகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து தேவையான மின்னஞ்சல் முகவரியைப் பெற முடியும்.

இது போன்று, மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு பிரிவிலுமான தலைப்புகளிலும் நமக்கேற்ற மின்னஞ்சல்களைப் பெற முடியும். இந்த மின்னஞ்சல் அமைப்பு மட்டுமே பயன்பாட்டாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு முகவரிகளை வழங்குகிறது. இந்த மின்னஞ்சல் அமைப்பிடமிருந்து புதிய மின்னஞ்சல் முகவரியைப் பெற விரும்புபவர்கள் http:www.mail.comin-en எனும் முகவரிக்குச் சென்று இங்குள்ள இலவச மின்னஞ்சல்கள் (Free Email) எனுமிடத்தில் சொடுக்கி உள்ளே சென்று, அங்கு கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்து தங்களுக்குத் தேவையான மின்னஞ்சல் முகவரியைப் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.