இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான வேலைச் சூழலை வழங்கும் நிறுவனங்களில் அஸெஞ்சர் முன்னிலை!

இந்தியாவில் பெண்களுக்கு மகப்பேறின் போது சம்பளத்துடன் அதிக நாட்கள் விடுப்பு தரும் நிறுவனங்களிலும் அஸெஞ்சர் தான் முன்னிலை வகிக்கிறது.

News image
Updated On :11 நவம்பர் 2016, 10:07 am

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களில் பெண்கள் சௌகரியமாகப் பணிபுரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ’அஸெஞ்சர்’ நிறுவனம் முன்னிலை வகிப்பதாக அவதார் எனும் பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று பட்டியலிட்டுள்ளது. அவதார் பட்டியலிட்டுள்ள 100 நிறுவனங்களில் முதல் 10 நிறுவனங்களில் ஒன்றாக அஸெஞ்சர் தேர்வாகி உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பல பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆண்கள், பெண்கள் வேறுபாடின்றி தொழிலாளர் விரோத மனப்பான்மையை கடைபிடிக்க அஸெஞ்சரில் மட்டும் தான் பெண்கள் பாதுகாப்புடனும், மன அமைதியுடனும் பணி புரியும் சூழல் நிலவுகிறது என அப்பட்டியல் கூறுகிறது. 

இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 45,000 பெண்கள் பணிபுரியும் அஸெஞ்சர் நிறுவனத்தில் பல்வேறு விதமாக நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு வேலைக்கான நேர்முகத் தேர்வில் தொடங்கி, வேலையில் உத்திரவாதம், பணிபுரியும் இடங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்தி தருவது, பாதுகாப்பு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பிற நிறுவனங்களைக் காட்டிலும் அஸெஞ்சர் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவில் பெண்களுக்கு மகப்பேறின் போது சம்பளத்துடன் அதிக நாட்கள் விடுப்பு தரும் நிறுவனங்களிலும் அஸெஞ்சர் தான் முன்னிலை வகிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கை இரண்டிலும் சாதிக்கக் கூடிய சூழலை உருவாக்கித் தருவதிலும் இந்தியாவில் அஸெஞ்சர் முன்னிலையில் இருப்பது பெருமைக்குரிய விசயம் என அதன் நிர்வாக இயக்குனர் ’ரேகா எம் மேனன்’ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.