வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் கால் கடுக்க காத்திருந்து நாள் ஒன்றுக்கு 2000 முதல் 4000 ரூபாய் வரை பணம் எடுத்துச் செல்லும் மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி எச்சரிக்கை! தற்போது நிலவி வரும் சில்லறைப் பற்றாக்குறையால் வங்கிகள் பணம் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடை செய்யப்பட்டு புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்ட 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை கலந்து அளித்துக் கொண்டு இருக்கின்றனவாம். இந்த ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் தடை செய்யப்பட்டதால் வங்கிகளில் தேக்கப்பட்டவை.
இந்த நோட்டுக்கள் செல்லாதவை. இவற்றை கண்டுபிடித்து மாற்றிக் கொள்ள அதே வங்கிகளை அணுகினால் அவர்கள் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாமல் ரிசர்வ் வங்கியை அணுகச் சொல்வார்களாம். ரிசர்வ் வங்கியிலும் அந்த தடை செய்யப்பட்ட 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகளில் பணம் மாற்றச் செல்வோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 2005 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டு புழக்கத்திலிருந்து நிறுத்தப்பட்ட 100 அல்லது 50 ரூபாய் தாள்கள் கலந்திருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்து விட்டு வாங்குவது நல்லது.
2005 க்குப் பிந்தைய ரூபாய் நோட்டு தானா? செல்லுமா? செல்லாதா? என இப்படித்தான் பரிசோதிக்க வேண்டுமாம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம்: கோபி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்

பேருந்துகளில் பொங்கல், தீபாவளி நேரங்களைக் காட்டிலும் அதிக கூட்டம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 8 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


