பேனாசோனிக் நிறுவனம் சமீபத்தில் ஏழு விதமான காற்று வடிகட்டிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த காற்று வடிகட்டிகள் மூலமாக நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில் மிதந்து கொண்டிருக்கக் கூடிய நச்சுத் தன்மை மிகுந்த துகள்கள் வடிகட்டப்படுகின்றன. நேனோ தொழிநுட்பத்தில் தயாரிக்கப் பட்டிருக்கும் இந்த காற்று வடிகட்டிகள் PM2.5 எனும் மிக மிக நுண்ணிய நச்சுத் துகள்களையும் கூட தனியாக வடிகட்டும் தன்மை கொண்டது. என பேனாசோனிக்கின் பொது மேலாளர் ஷையத் மூனிஸ் அலி அல்வி தெரிவித்துள்ளார்.
தங்களது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களுக்கு தரமான பொருட்களை அறிமுகம் செய்வதில் தான் பேனாசோனிக்கின் கெளரவம் நிலைத்திருக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த காற்று வடிகட்டிகளின் விலை 11,995 ரூபாயில் தொடங்கி 34,995 வரை நீள்கிறது. இந்த வடிகட்டிகளைக் கொண்டு 283 சதுர அடியிலிருந்து 452 சதுர அடிகள் வரையிலான அமைப்புள்ள அறைகளின் உட்காற்றை வடிகட்ட முடியுமாம்.
இதில் ஸ்லீப் மோட், குழந்தைகளின் பாதுகாப்புக்குத் தேவையான சைல்ட் லாக், வடிகட்டிகள் ரிப்பேரானால் மாற்றிக் கொள்ளும் வசதி எல்லாம் இருக்கிறது. மேலும் இந்த புத்தம் புதிய காற்று வடிகட்டிகளின் ஆயுள் பத்து வருடங்கள் என்று பேனாசோனிக் நிர்ணயித்திருக்கிறது.
சமீபத்தில் நமது தலைநகர் டெல்லியில் மிகக் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு அங்கு பள்ளி, அலுவலகங்களுக்கெல்லாம் விடுமுறை கூட அறிவித்தார்களே. யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதைய காற்று மாசுக்கு மிகப் பெரும் காரணமாக இருந்தது இந்த PM2.5 தான். கண்ணுக்குத் தெரியாத மிக மிக நுண்ணிய நச்சுத் துகள்களான இவற்றால் நுரையீரலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாம். இந்தப் புதிய காற்று வடிகட்டிகள் இவற்றைக் கூட வடிகட்டி விடும் என்பது சற்று ஆறுதலான விசயமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலை புறக்கணித்த புதுப்பட்டினம் மீனவா்கள்: அதிகாரிகள் பேச்சு நடத்தியதால் வாக்களிப்பு

ஜனநாயக கடமையாற்றிய மன நல காப்பகவாசிகள்!

முதன்முறை வாக்களித்த இளம்பெண்கள், இளைஞா்களின் எதிா்பாா்ப்புகள் என்ன?

கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் ராமாநுஜா் அவதார திருவிழா நிறைவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


