ஈரோடு சின்னியம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா(31) தனியார் வங்கி மேலாளர். கடந்த வியாழன் அன்று இரவு கிருத்திகாவும், அவரது பெற்றோர் மனோகரன்(60), ராதாமணி(55) மூவரும் சின்னியம்பாளையத்தில் தங்களது வீட்டில் கூட்டாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுளனர். மறுநாள் வெள்ளி அதிகாலையில் வீட்டுக்கு வழக்கமாக பால் சப்ளை செய்ய வரும் பால்காரர் நீண்ட நேரமாகக் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் அடிப்படையில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் கதவைத் திறக்க முயன்று முடியாத நிலையில் கதவி உடைத்து உள்ளே நுழைந்த போது மூவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்த செய்தி தெரிய வந்திருக்கிறது.
நிச்சயதார்த்தம் நடைபெற மூன்றே நாட்கள் இருக்கையில் நிகழ்ந்த இந்த தற்கொலை விவகாரம் பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டவர்கள் காவல்துறைக்கு மூன்று கடிதங்களை விட்டுச் சென்றுள்ளனர். அதில் ஒரு கடிதத்தில் மிகுந்த மன உளைச்சல் மற்றும் குழப்பத்தின் காரணமாகவே மூவரும் தற்கொலை முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது இறுதிச் சடங்கிற்குத் தேவையான தொகை முழுவதையும் ஒரு கைப்பையில் வைத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனராம்.
இந்த தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நிச்சயதார்த்தத்திற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், விழாவிற்கு மூன்று நாட்களே இருந்த நிலையில் கூட்டாக நிகழ்ந்த இந்த தற்கொலை ஏன்? எனும் கேள்வி சின்னியம்பாளையத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


