தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்டார் விஜய் டி.வி யின் ‘சந்திர நந்தினி’ புகழ் நந்தினி யார் தெரியுமா?

இவர் குழந்தை நட்சத்திரமாக இரட்டை வேடங்களில் கலக்கிய விஷால் பரத்வாஜின் ‘மக்டீ’ இந்திப் படத்தில் தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றிருந்தார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2017, 7:50 am

இந்தப் பெண்ணைத் தெரிகிறதா? 

ஸ்வேதா பாஸு பிரசாத்- சில வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர் என்பதாக இவரது பெயர்  அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்றது. அப்போதும் கூட சிலர், ச்சேச்சே இவரா? அப்படிப்பட்டவராக இருக்க வாய்ப்பில்லையே என்று வருத்தத்துடன் முணுமுணுத்த சத்தமும் காதில் விழாமலில்லை, ஏனெனில் இவர் குழந்தை நட்சத்திரமாக இரட்டை வேடங்களில் கலக்கிய விஷால் பரத்வாஜின் ‘மக்டீ’ இந்திப் படத்தில் தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அதில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்த படம் ‘சந்தமாமா’. 

சில வாரங்களாக மாலையில் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சந்திர நந்தினியின் நந்தினியை எங்கோ பார்த்திருக்கிறோமே! எங்கே என்று யோசித்துக் கொண்டிருந்ததில் இன்று விடை சிக்கியது. அந்த நந்தினி சாட்ஷாத் இதே ஸ்வேதா பாஸு பிரசாத். நந்தினியாக ஸ்வேதாவின் நடிப்பில் சோடை காண முடியாது. அருமையான நடிப்பு, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஸ்வேதா நன்மை செய்திருக்கிறார்.

ஸ்வேதாவுக்கு குழந்தைத் தனமான அழகான முகம். பெண்ணுக்கு நடிப்புத் திறமையும் நிறையவே இருக்கையில் அப்படி ஓர் குற்றச்சாட்டில் ஏன் சிக்கினார் என்பது தான் புரியாத புதிர். எது எப்படியோ அபவாதமாக பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தங்களுடைய திரையுலகப் பயணத்தையே முடித்துக் கொள்ளும் இளம் நடிகைகளில் ஸ்வேதா பாராட்டப்பட வேண்டியவர். ஏனெனில் அப்போதும், இப்போதும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வந்ததோடு அல்லாமல் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது கலையுலகப் பயணத்தையும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.

ஹாட்ஸாப் டு யூ ஸ்வேதா @ நந்தினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.