மத்திய அரசின் ‘ஜன் ஒளஷாதி’ மருந்துக்கடைகள் ஏழை மக்களின் வரமா?

ஜன் ஒளஷாதி மருந்துக்கடைகளைப் பற்றி இதுவரை அறியாதோர் கீழே உள்ள இரண்டு இணைப்புகளை அழுத்தி தமிழ்நாட்டிலும், சென்னையிலும் ‘ஜன் ஒளஷாதி மருந்துக்கடைகள் எங்கெங்கே அமைந்துள்ளன எனும் விவரங்களை அறிந்து கொள்ளலாம
மத்திய அரசின் ‘ஜன் ஒளஷாதி’ மருந்துக்கடைகள் ஏழை மக்களின் வரமா?

முகநூலில் ஜன் ஒளஷாதி மருந்துக்கடையில் தனக்குத் தேவையான மருந்துகளை வாங்கியதில் தனக்கு கிடைத்த பலனைப் பற்றி ஒருவர் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில், தனியார் மருந்துக்கடைகளில் ரூ 500 க்கும் அதிகமாக செலவளித்து வாங்கக் கூடிய மருந்துகள் அனைத்தையும் மத்திய அரசின் நலத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் இந்த ஜன் ஒளஷாதி மருந்துக் கடைகளில் வாங்கும் போது வெறும் 60 ரூ தான் செலவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இத்தனை குறைவாக மத்திய அரசால் நாட்டு மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தர முடியுமெனில் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்பதைத் தாண்டி இந்த வகையான மருந்துக்கடைகளை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நிறுவாமல் நாடு முழுவதுமே வறுமைக்கோட்டுக்கு கீழான மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலுமே இந்த திட்டத்தைப் பரவலாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளலாமே! ஏனெனில், இந்தியாவில் பணக்காரர்களை விட ஏழை மக்களின் குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் சதவிகிதம் தான் அதிகம் என்கையில் இந்தக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே இத்திட்டத்தால் நிஜமான பலன் கிடைக்கக் கூடும். 

மத்திய அரசின், ஏழை மக்கள் உயிர் காக்கும் சேவைத் திட்டங்களில் ஒன்றான இந்த ‘ஜன் ஒளஷாதி’ மருந்துக் கடைகள் நிறுவப்படும் இடங்களும் கூட பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வசிக்கும் பகுதிகளாக இருந்தால் மட்டுமே அம்மக்கள் பெருவாரியாக இந்த மருந்துக்கடைகளைப் பயன்படுத்தி பலன் பெற வசதியாக இருக்கும். அப்படியல்லாது லாப நோக்கில் இந்த மருந்துக் கடைகளை நடத்துவதற்கான உரிமம் பெற்றவர்கள் நகர மையத்திலோ அல்லது மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களிலோ கட்டமைத்துக் கொண்டால் உண்மையில் மத்திய அரசு இந்த திட்டத்தை யாருக்காகத் தொடங்கியதோ அவர்கள் அதனால் பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடலாம். 

ஜன் ஒளஷாதி மருந்துக்கடைகளைப் பற்றி இதுவரை அறியாதோர் கீழே உள்ள இரண்டு இணைப்புகளை அழுத்தி தமிழ்நாட்டிலும், சென்னையிலும் ‘ஜன் ஒளஷாதி மருந்துக்கடைகள் எங்கெங்கே அமைந்துள்ளன எனும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த மருந்துக்கடைகளில் மக்களின் உயிர் காக்கும் அத்தியாவசியமான மருந்துகளின் விலையில் பிற தனியார் மருந்துக்கடைகளோடு ஒப்பிடுகையில் 80 % வரை விலை குறைவு என்று சில இணையதளங்களில் காண நேர்ந்தது. அது நிஜமா? நிஜமென்றால் இத்திட்டம் உண்மையில் ஏழை மக்களுக்குக் கிட்டிய வரமே! தினமணி வாசகர்களில் ஜன் ஒளஷாதி மருந்துக்கடைகளைப் பயன்படுத்திப் பலன் பெற்றவர்கள் எவரேனும் இருந்தால். அது குறித்த தங்களது நேர்மறை மற்றும் எதிர்மறைக் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அது இத்திட்டத்தைப் பற்றி இதுவரை அறிந்திராத புதியவர்களுக்குப் பலனுள்ளதாக இருக்கக்கூடும்.

Image courtesy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com