குயின் எலிஸபெத் முகமது நபியின் பேத்தி என்றால் நம்புவீர்களா?

குயின் எலிஸபெத்தின் நரம்புகளில் முகமது நபியின் குருதி ஓடிக் கொண்டிருப்பதை பிரிட்டிஷாரில் சிலர் அறிந்திருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை பல வரலாற்று ஆசிரியர்கள் மறுதலித்துள்ளனர்.
குயின் எலிஸபெத் முகமது நபியின் பேத்தி என்றால் நம்புவீர்களா?
Published on
Updated on
1 min read

குயின் எலிஸபெத்தை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். இங்கிலாந்து பேரரசி குயின் விக்டோரியாவின் பேத்தியான குயின் எலிஸபெத்தின் பரம்பரை கொடி வழி குறித்து மொராக்கோவைச் சேர்ந்த செய்தி ஊடகம் ஒன்று சமீபத்தில் ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வில் தெரிய வந்த உண்மை என்னவென்றால் குயின் எலிஸபெத்தின் 43 ஆம் தலைமுறைப்பாட்டியின் பெயர் ஃபாத்திமா என்பதும் அவர் இஸ்லாம் மதத்தைக் கண்டறிந்தவரும் இறைதூதருமான முகமது நபி என்றும் தெரியவந்துள்ளது.

குயின் எலிஸபெத்தின் நரம்புகளில் முகமது நபியின் குருதி ஓடிக் கொண்டிருப்பதை பிரிட்டிஷாரில் சிலர் அறிந்திருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை பல வரலாற்று ஆசிரியர்கள் மறுதலித்துள்ளனர். முதன்முறையாக கிபி 14 ஆம் நூற்றாண்டில் இந்த வாதம் முன் வைக்கப்பட்டது. தொடர்ந்து குயின் எலிஸபெத்தின் வம்சாவளி குறித்த ஆராய்ச்சி நடந்தவண்ணமே இருந்தது. நபிகளின் மகளான பாத்திமாவின் சந்ததியில் வந்த இளவரசி ஒருத்தி இஸ்லாத்திலிருந்து விலகி மதம் மாறியதில் உண்டான சந்ததியே குயின் எலிஸபெத்தின் சந்ததி என்றொரு புரளி பல நாட்களாகக் கிளப்பி விடப்பட்டு வருகிறது.

ஸ்பெயினின் நிலவிய இடைக்கால இஸ்லாமிய வரலாற்றைப் பின்பற்றிச் சென்று ஆராய்ச்சியில் இறங்கினால் குயின் எலிஸபெத்தின் வம்சாவளி முகமது நபியின் மகளாக இருக்க 90 சதவிகிதம் வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொடர்புச் சங்கிலியில் எகிப்தின் முன்னாள் பிரதான முஃப்தியான அலி கோமாவின் சந்ததியும் குயினுடன் பிணைந்திருக்க வாய்ப்பிருக்கிறதாம். இதை பிரிட்டிஷ் மக்கள் பெருமையாகக் கருதுகிறார்களோ இல்லையோ ஆனால் இஸ்லாமிய மதத் தலைவர்கள் பலர் இதை பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள் என 1986 ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் பிரதமர் மார்கரேட் தாட்சருக்கு கடிதம் எழுதப்பட்டது.

அலி கோமாவின் கூற்றின்படி குயின் எலிஸபெத்தின் மூத்த தலைமுறையைச் சேர்ந்த இளவரசி ஜெய்தா 11 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இஸ்லாத்திலிருந்து, கிறிஸ்தவ மதத்துக்கு மதம் மாறிய பின்னர் உருவானது தான் ஸ்பெயின் அரச வம்சம். அதன் கொடி வழிகளால் உருவானது தான் இங்கிலாந்து அரச வம்சம் என்று உரிமை கோரப்படுகிறதாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com