உங்கள் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!

மின்னஞ்சல், இணைய வங்கிச் சேவை உள்ளிட்ட அவரவர் தளங்களுக்குள் நுழைய கடவுச்சொல் (Password) அவசியம்.
உங்கள் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!
Published on
Updated on
1 min read

மின்னஞ்சல், இணைய வங்கிச் சேவை உள்ளிட்ட அவரவர் தளங்களுக்குள் நுழைய கடவுச்சொல் (Password) அவசியம். அதை மறந்து தவிப்பவர்கள் பலர். கடவுச்சொல் வேறு யாருக்காவது தெரிந்துவிட்டால் ஆபத்தில் முடியலாம். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கண்களைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நியூயார்க்கில் உள்ள ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

கருவிழி ஒருவருக்கொருவர் வேறுபடும் என்பதால், உங்கள் இணைய கணக்குகளுக்குள் வேறு யாரும் நுழைய முடியாது.

- போளூர் சி.ரகுபதி

உருது மொழியில் 'லால்' என்றால் சிவப்பு, 'குடி' என்றால் கோபுரம். சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்த கோபுரத்தைக் காட்டி, அன்னிய படையெடுப்பாளர் மாலிக் காபூர்  அது என்ன லால் குடி?என்று கேட்டிருக்கிறார். பின்னாளில் 'லால்குடி' என்ற பெயரே நிலைத்துவிட்டது. லால்குடியின் முந்தைய பெயர் 'திருத்தவத்துறை'.

கி.பி.1583-இல் பிரயாகை வந்த முகலாய மன்னர் அக்பர் கங்கை, யமுனை சங்கமத்தைக் கண்டு பிரமித்து 'அல்லாஹ் ஆபாத்' (ஆண்டவன் குடி கொண்டிருக்கும் இடம்) என்று மாற்றினார். அதுவே பிறகு 'அலகாபாத்' ஆயிற்று.

- எம்.அசோக்ராஜா

'அரவுண்ட் தி வேர்ல்ட் இன் 80 டேஸ்' (Around The World In 80 Days) என்னும் ஆங்கிலப் படத்தில் 38,000 ஆடுகள், 2,840 எருமைகள், 800 குதிரைகள், 17 காளைகள், 15 யானைகள் இடம்பெற்றுள்ளன. உலகிலேயே அதிக விலங்குகள் காட்சியளிக்கும் ஒரே திரைப்படம் இதுதான்.

- எல்.மோகனசுந்தரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com