இனி கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டாம், அதற்கு மாற்றாக இனி இதுதான்!

பள்ளிப்பாடங்களை நினைவில் வைத்துகொள்வது சிறுவர்களுக்கு எப்படி சவாலான விஷயமோ,
இனி கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டாம், அதற்கு மாற்றாக இனி இதுதான்!
Published on
Updated on
1 min read

பள்ளிப்பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வது சிறுவர்களுக்கு எப்படி சவாலான விஷயமோ, அதைப்போல் வங்கி, செல்லிடப்பேசி, கணினி ஆகியவற்றின் கடவுச் சொற்களை (பாஸ்வேர்ட்) நினைவில் வைத்துக் கொள்வது இன்றைய காலங்களில் பெரியவர்களுக்கு சவாலாக உள்ளது.

இது ஏதோ இந்தியர்களுக்கு மட்டும் உள்ள பிரச்னை என்று கருத வேண்டாம். உலகம் முழுவதும் கடவுச் சொற்களை நினைவு வைத்துக் கொள்வதற்கு படித்தவர்களே கஷ்டப்படுகின்றனர்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்தவுடன் இந்த கடவுச் சொற்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது. என்னதான் கைரேகை பதிவு, முகத் தோற்றப் பதிவு ஆகியவை வந்தாலும் கடவுச் சொற்களை நாம் நினைவில் வைத்தே ஆக வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண 'பாஸ்வேர்டை'ப்போல் 'பாஸ்ஃபிரேஸ்' எனும் கடவு வாக்கியத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கடவுச் சொல்லை விட கடவு வாக்கியம் 24 சொற்களைக் கொண்டு நீளமாக இருந்தாலும், இதை எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி கடவுச்சொல், கைரேகைப் பதிவு, முகத் தோற்றம் பதிவு ஆகியவற்றை விட இது மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர்கள் உறுதியளிக்கின்றனர்.

6 வார்த்தைகளுடன் கூடிய அந்த கடவு வாக்கியத்துக்கு ஏற்றவாறு ஒரு படத்தையும் பயனாளிகள் தமது நினைவுக்காக வரைந்து வைத்துக் கொள்ளலாம் என்றும் இதனால் அவர்கள் கடவு வாக்கியத்தை எந்தச் சூழ்நிலையிலும் மறக்கவே மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான சோதனை ஆய்வையும் ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். அதில், 50 இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு கடவு வாக்கியத்தை அளித்துள்ளனர். பின்னர் சில நாள்களுக்கு பிறகு அவர்கள் அந்த கடவு வாக்கியத்தை எழுதி வைக்காமல் நினைவுபடுத்தி சரியாகத் தெரிவித்தும் உள்ளனர். முதல்கட்டமாக இணையதள கடவுச் சொற்களுக்கு பதிலாக கடவு வாக்கியம் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com