
சுராகவ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பறவையின் விலை 25 லட்சங்களாம். இந்தப் பறவையில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் நிமிடத்திற்கு நிமிடம் இது தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது. நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கும் இந்த வண்ணங்களை கேமிராவில் சிறை பிடிக்க சுமார் 19 புகைப்படக்காரர்கள் தொடர்ச்சியாக 62 நாட்கள் காத்திருந்து மிகப் பொறுமையாக இதன் உடலில் நிகழ்ந்த வண்ண மாற்றங்களை படம் பிடித்திருக்கிறார்கள். மனித யத்தனங்கள் இன்றி இயற்கை தானாகவே சில அற்புதமான விஷயங்களைத் தன்னகத்தே ஒளித்து வைத்திருப்பதற்கு இந்தப் பறவையின் உடலில் நிகழும் தன்னிச்சையான வர்ணஜாலமும் கூட ஒரு உதாரணமே!
சுராகவ்வின் உடலில் நிகழும் வர்ண ஜாலத்தை காணொளியாகக் காண...
இது போன்ற கோடிக்கணக்கான விந்தைகளை தன்னுள் அடக்கியது இயற்கை. அதன் மேன்மைக்கு ஊறு விளைவிக்காமல் காக்க வேண்டியது மனிதர்களான நமது கடமை.
மரமே நடாம குழந்தைங்களைப் பெத்துப் போட்டுட்டு இருந்தா அதுங்க தண்ணிக்காக அடிச்சிக்கிட்டு செத்துராது?!
பாம்பு விஷமுள்ளதா? விஷமற்றதா? எளிதாகக் கண்டறிய டிப்ஸ்!
குயின் எலிஸபெத் முகமது நபியின் பேத்தி என்றால் நம்புவீர்களா?
மைக்ரோ ஃபைபர் எனும் பிளாஸ்டிக் அரக்கனின் சுயரூபம்! தடை செய்வது எப்போது?
கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.