பணம் தேவையே! அதை எப்படிச் சம்பாதிப்பது?

இது இளமைக் காலம். சந்தோஷத்தையும், கேளிக்கையையும் மட்டுமே நாம் அனுபவிக்க வேண்டிய வயது
பணம் தேவையே! அதை எப்படிச் சம்பாதிப்பது?

இது இளமைக் காலம். சந்தோஷத்தையும், கேளிக்கையையும் மட்டுமே நாம் அனுபவிக்க வேண்டிய வயது இது என பெரும்பாலான இளைஞர்கள் நினைத்துக் கொண்டு எதிர்கால வாழ்க்கை குறித்து சிந்திப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

சில பேர் எப்போதுமே பொதுநலம் கொண்டு பிறருடன் வெளியே செல்வது, அவர்களின் வேலை தொடர்பாக அலைந்து திரிவது என வாழ்க்கையைப் பிறருக்காக வாழ்ந்து வருவார்கள். இவர்கள் சமூகத்துக்காக, மற்றவர்களுக்காகவே வாழ்ந்து தங்களின் எதிர்காலத்தை தொலைத்துக் கொள்வார்கள். பொதுநலம் தேவைதான், அது தன் நலத்துடன் ஒன்றி, இணைந்து வந்தால்தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்.

கல்லூரி நட்புகளும், பள்ளி நட்புகளும் வாழ்க்கை முழுவதுமே தொடர்ந்து வரும் விஷயங்கள் அல்ல என்பதை இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் புரிந்து கொள்வதில்லை. இத்தகைய இளைஞர்களிடம் யாராவது, 'என்னப்பா? எதிர்காலத்தை பற்றி சிந்திக்காம இப்படி காலையிலிருந்து, இரவு வரை வெளியேவே சுத்திக்கிட்டு இருக்கியே?' என கேட்டால், கேட்டவர் காதைப் பொத்திக்கொள்ளும் வகையில் நண்பர்கள் கூட்டம் வெளுத்து வாங்கும். ஆனால், சில காலங்களுக்கு பின்பு இத்தகையவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும்.

நண்பர்கள் குழுவுடன் நேரத்தைச் செலவிடும் இளைஞர்கள் தங்களைப் பற்றி சிந்திக்க தொடங்கினால்தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையே பிறக்கும்.

'நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எதிர்காலத்தில் இப்படி எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நமக்கு பணம் தேவையே... அதை எப்படிச் சம்பாதிப்பது?' என சிந்தித்தால் மட்டுமே எதிர்காலம் குறித்த பயம் போகும். இல்லையென்றால், சில காலத்துக்கு பின்னர் எதிர்காலம் நம்மை நோக்கி சிரிக்கும்.

சில நேரங்களில், நண்பர்கள் மட்டுமல்ல. பெற்றோரும் கூட உங்களது எதிர்காலம் குறித்து முடிவெடுக்கத் தயங்குவார்கள். ஏனென்றால் நீங்கள் சொன்னதால்தான் நான் இதைச் செய்தேன். இப்போது பாதிக்கப்பட்டு விட்டேன் என்பன போன்ற விமர்சனங்கள் உங்களிடமிருந்து வரக்கூடும் என்ற தயக்கத்தில் சொல்ல மறுத்து விடுவார்கள். எனவே, சிந்தித்துச் செயல்பட வேண்டிய பொறுப்பு உங்களை மட்டுமே சாரும்.

உங்களுக்கு வேண்டிய சிந்தனையை அடுத்தவர் சிந்தித்து முடிவெடுத்தால், எதிர்காலத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கூட உங்களை விட்டு தள்ளிப் போய்விடும்.

எனவே, சிந்திக்க தொடங்குங்கள். நாளை சிந்திப்போமே என எண்ணாமல் இன்றே, இந்தக் கணமே சிந்தியுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com