லவ் லேப்! இப்படி ஒரு மையம், இப்படி ஒரு ஆராய்ச்சியா? 

டாக்டர் ஜான் காட்மேன் (Dr John Gottman) என்று ஒரு அமெரிக்க உளவியலாளர் இருந்தார்
லவ் லேப்! இப்படி ஒரு மையம், இப்படி ஒரு ஆராய்ச்சியா? 
Published on
Updated on
2 min read

டாக்டர் ஜான் காட்மேன் (Dr John Gottman) என்று ஒரு அமெரிக்க உளவியலாளர் இருந்தார். அவர் காதல் சோதனைக் கூடம் (Love Lab) ஒன்று வைத்திருந்தார்.

அதில் கிட்டத்தட்ட 3000-க்கும் மேற்பட்ட ஜோடிகளை, (கணவன் மனைவி) பேட்டி எடுத்தார். 

அந்தத் தம்பதிகள் பேசுவதை கால் மணி நேரம் விடியோ எடுத்தார். அதில் அவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்ச்சிக்கும், உடல் அசைவுகளுக்கும் ஒரு எண் கொடுத்தார். இப்படி ஒவ்வொரு வினாடிக்கும் செய்தார். 

கால் மணி நேரம் என்பது ஆணுக்கு 900 வினாடிகள் பெண்ணுக்கு 900 வினாடிகளாக பிரிக்கப்பட்டது. மொத்தம் 1800 வினாடிகளுக்கான உணர்ச்சி வெளிப்பாடுகளை துல்லியமாக பதிவு செய்தார் ஜான். அவற்றுக்கு எண்களை வழங்கினார்.

உதாரணமாக ஒரு ஜோடியின் முதல் ஆறு வினாடிகளில் 7,7, 14, 11, 11 என்று எண் கொடுக்கப்பட்டால், கொஞ்ச நேரம் கோபமாகவும், பின்னர் உணர்ச்சி எதையும் வெளிப்படுத்தாமலும், பின்பு தன் கருத்தை நியாயப்படுத்திய, பின்பு புலம்பவும் ஆரம்பித்தார் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கினார்.

இவ்விதம் 15 நிமிடங்களுக்கு ஆராய்ச்சி செய்தபின் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கணவன் மனைவியாக தொடர்வார்களா அல்லது விவாகரத்துப் பெற்றுவிடுவார்களா என்று 95 சதவிகிதம் உறுதியாக ஜான் காட்மேனால் கூற முடிந்தது.

ஜான் காட்மேன் விவாகரத்துக் கணக்கு (The Mathematics of Divorce) எனும் புத்தகம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com