உலகின் தலைசிறந்த விமான நிலையங்கள் எவை என்று தெரியுமா?

2018-ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடட்ராக்ஸ் (Skytrax)
உலகின் தலைசிறந்த விமான நிலையங்கள் எவை என்று தெரியுமா?

2018-ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடட்ராக்ஸ் (Skytrax)  என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியல் இதுதான். முதல் இடத்தை பிடித்தது சிங்கப்பூர் ஷங்கி விமான நிலையம்.

1 சாங்கி விமான நிலையம் - சிங்கப்பூர் 
2 இன்ஷியான் - சியோல் 
3 ஹனெடா - டோக்கியோ 
4 ஹாங்காங்
5 தோஹா ஹமாத்
6 மியூனிச்
7 சென்ட்ரைர் நேகோயா
8 லண்டன் ஹீத்ரோ
9 ஜுரிச்
10 பிராங்போர்ட்

உலகின் சுத்தமான 10 விமான நிலையங்களையும் பட்டியல் இட்டுள்ளது ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம்

1 டோக்கியோ ஹனெடா
2 சென்ட்ரைர் நேகோயா
3 இன்சோன்
4. தைவான் தாவோயுவான்
5 சிங்கப்பூர் சாங்கி
6 டோக்கியோ நரிடா
7 ஹாங்காங்
8 ஜுரிச்
9 டோஹா ஹமாத்
10 ஹெல்சின்க்கி

அண்மையில் மேம்படுத்த சிறந்த விமான நிலையங்கள் இவைதான்

1 ரோம் ஃப்யூமிசினோ (Fiumicino)
2 பெர்த்
3 கால்கரி
4. தைவான் தாவோயுவான்
5 ஏதென்ஸ்
6 நாடி
7 மாண்ட்ரீல்
8 மாஸ்கோ ஷெர்மெமிட்டோ
9 ஹெளஸ்டன் இண்டர்காண்டினென்டல்
10 மணிலா

இந்தப் பட்டியலை எல்லாம் பார்க்கும் போது இந்தியாவில் ஏதேனும் ஒரு விமான நிலையம் இடம்பெற்றிருக்கலாம் என்று தவிர்க்க முடியாமல் தோன்றுகிறது. ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தியாக 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், உலகின் தலைசிறந்த 100 விமான நிலையங்களில் 60 இடத்தில் புது தில்லியும், 64-வது இடத்தில் மும்பய் விமான நிலையும் இடம்பிடித்துள்ளது. மேலும் 10 தலைசிறந்த விமான டெர்மினல்களின் பட்டியலில் மும்பய் - டி2 Mumbai - T2, 9-ம் இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டாம் டெர்மினல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com