Enable Javscript for better performance
கோபத்துல செல்போனை மெத்தை மீது தூக்கி போடுற மாதிரியான மொமண்ட்- Dinamani

சுடச்சுட

  

  கோபத்துல செல்போனை மெத்தை மீது தூக்கி போடுற மாதிரியான மொமண்ட்

  By DIN  |   Published on : 25th November 2018 12:34 PM  |   அ+அ அ-   |  

  cell_phone

  வலைதளத்திலிருந்து...

  இந்த ஆண்டு (2018)  இயற்பியலுக்கான  நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96. 

  அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர்,  'ஆப்டிகல் டிவீசர்ஸ்' எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறுகிறார். பரிசுத் தொகையான 6.5 கோடி ரூபாயில் (மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது) 50 சதவிகிதத்தை இவர் பெறுகிறார். 

  சதம் அடிக்க நான்கே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்படியொரு பரிசைப் பெற்று உலகோரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இந்தக் கிழவர். ஆனால், இதை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையாம்.

  கிழவர் அப்படியென்ன செய்துவிட்டார்?   

  'சிறிய பாகங்களைப் பிடித்துக்கொள்வதற்காக ஒரு இடுக்கி (ட்வீஸர்) பயன் படுத்தப்படுவதை,  நாமெல்லாம்  வாட்ச் ரிப்பேர்,   மொபைல் போன் ரிப்பேர் கடைகளுக்குச் சென்றிருந்தால் பார்த்திருப்போம் இல்லையா? அதுபோல நானோ, மைக்ரோ துகள்களில் நடைபெறும் அணு ஆராய்ச்சிகளில் கண்களுக்கே புலப்படாத ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள ஓர் உபகரணம் வேண்டுமென்பதை உணர்ந்து இவர் தொடங்கிய ஆராய்ச்சிதான் "ஆப்டிகல் ட்வீஸர்'. லேசர்  உயர் ஒளிக்கற்றைகளைச் செலுத்தி அவை தரும் அழுத்தத்தின்மூலம் பிடித்துக்கொள்ளும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததுதான் இவரது சாதனை. குறிப்பாக, தற்போது "லேசர்' மூலம் செய்யப்படும் கண் அறுவைச் சிகிச்சையின் போது பேருதவி புரியும் என்று மருத்துவத்துறை மகிழ்கிறது.

  அமெரிக்காவின் பெல் ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருக்கும் இவர், இயற்பியலின் ஒளியியல் துறையில் மிகப்பெரிய சாதனைபுரிந்து, 96 வயதில் (இவர்தான் உலகிலேயே இதுவரை 'நோபல்' பெற்றிருப்பவர்களில் மூத்த வயதுடையவர்) 2018ஆம் ஆண்டுக்கான பரிசினை (மூன்றிலொருவராகப்) பெற்றிருக்கிறார்.  

  https://kadavulinkadavul.blogspot.com

  உதிக்கும்போதும் மறையும்போதும் ரசிக்கும் உலகம்...
  உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்...
  சூரியனை மட்டுமல்ல, மனிதனையும்.

  - ஜானகி ராஜன்


  தோற்றாலும் நம்பிக்கையோடு இரு.
  ஆனால்... யாரையும் நம்பி தோற்றுவிடாதே...
  அதன் வலி மரணத்தை விட கொடியது.

  - திருப்பதி ராஜா


  கோபம் வரும்போது வாயை மூடிக்கொள்.
  குழப்பம் வரும்போது கண்களை மூடிக்கொள்.
  தோல்வி வரும்போது காதுகளை மூடிக் கொள்.
  வெற்றி வரும்போது மனதை மூடிக்கொள்.

  - ஜெயபிரகாஷ்


  ஒவ்வோர் ஆண்டும் புதிதாகச் செய்து  இழுத்து வருகிற பூரி ஜெகன்னாதர் ரதம் போல...தினமும்  புதுக்கவலைகள் இழுத்துப் போகிறது வாழ்வை.

  - டிகே கலாப்ரியா


  சுட்டுரையிலிருந்து...

  நோக்கத்தை முன்னிறுத்தினால்...
  அது பணி.
  நம்மை முன்னிறுத்தினால்...
  அது  பதவி

  - அனாமிகா

  நெருக்கமாப்  பழகுறவங்களக் கண்டுக்காம... 
  தெனாவட்டா  பேசறவங்களையே தேடிப் போய் பேசுறாங்க... 
  பலர்.

  - செந்தமிழ்நாட்டு தமிழச்சி


  கோபத்துல செல்போனை மெத்தை மீது தூக்கி போடுற மாதிரியான மொமண்ட்... போய் மெத்தை மேல சரியா விழும் வரை ஒரு பதட்டமாவே இருக்கும்.


  - காற்றின் மொழி சேட்டு


  தினசரி வாழ்க்கையைக் கடக்க நிறையப் புன்னகையும், சில கண்ணீர்த் துளிகளும் தேவைப்படுகின்றன.

  - குட்டிமா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai