இந்த சிற்பம் காணக்கிடைப்பது மகாராஷ்டிர மாநிலம், ஹட்டர்சங் எனும் குக்கிராமத்தில் இருக்கும் சங்கமேஸ்வரர் கற்கோயிலில். இந்த சிற்பத்தைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். மொத்தம் 5 உடல்கள் ஆனால் முகமோ ஒன்றே ஒன்று தான். சிலர் இதைப் பெண்ணின் முகம் என்கிறார்கள். ஆனால், பக்தர்களில் சிலர் இந்த சிற்பத்தில் இருப்பது கிருஷ்ணன் என்கிறார்கள். இந்த சிற்பம் அமைந்திருப்பது கோயில் கூரையில். ஆம், கூரையின் மீது புடைப்புச் சிற்பமாகத்தான் இது செதுக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால இந்தியாவின் சிற்பக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஐந்துடல் ஓர் முகச் சிற்பத்தை எந்தப் பக்கமிருந்து எப்படிப் பார்த்தாலும் அந்த ஓர் முகம் ஐந்து உடல்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்துவது தான் இதன் விசேஷமே!
பிஜப்பூர் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிரா- கர்நாடக எல்லையில் சோலாப்பூருக்கு 40 கி.மீ தெற்கே உள்ள ஹட்டர்சங் - குடால், இடைக்கால இந்திய கட்டிடக்கலைச் சிறப்புகளைத் தேடுபவர்களுக்கு ஒரு புதையல் போன்றது. பீமா அனா சினா நதிகளால் இருபுறமும் சூழப்பட்டு தீபகற்ப நில வடிவத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. 17 ஆம் நூற்றாண்டு முதல் இந்த இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் உட்புறச் சிற்பங்கள் அத்தனையும் தொல்லியல் புதையல்கள் என்று தான் சொல்ல வேண்டும், அத்துணை அழகு. கோயில் உருவான காலம் 11 முதல் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். உருவாக்கியவர்கள் சாளுக்கிய மன்னர்கள். இதை ஹரிஹரேஸ்வரர் ஆலயம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


